
சென்னை லீலா பேலஸில் இன்று (மே 09) காலை 11.30 மணிக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஏசியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 1,891 கோடி ரூபாய் முதலீட்டில் அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு கட்டமைக்கப்பட்ட ஊக்கச் சலுகைகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசு மற்றும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே மேற்கொள்ளப்பட்டது.

“உயர்கல்விக்கு தேவையான உதவி செய்வதாக முதலமைச்சர் கூறினார்”- மாணவி நந்தினி பேட்டி!
இதன்மூலம், இந்நிறுவனத்தில் சுமார் 2,000- க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் என அரசு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொழில்துறை நிகழ்ச்சிகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளாக உள்ளன. ஏற்றுமதி தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்கள் அதிகளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை தமிழக அரசு வரவேற்கிறது. புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
“தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன்”- கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் மே 23- ஆம் தேதி செல்கிறேன். ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழகம் உள்ளது. முன்னணி தொழிற்துறை நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.


