Homeசெய்திகள்தமிழ்நாடுநீர் தேடி அலையும் டெல்டா... மக்களை ஏமாற்றும் திறனற்ற ஆட்சி! தஞ்சையில் வெடித்த விவசாயிகளின் ஆவேசக்...

நீர் தேடி அலையும் டெல்டா… மக்களை ஏமாற்றும் திறனற்ற ஆட்சி! தஞ்சையில் வெடித்த விவசாயிகளின் ஆவேசக் கண்டனம்!”

-

- Advertisement -

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப் போய் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சி நடத்தி வரும் வெற்று நாடகங்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் கண்டித்து தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீர் தேடி அலையும் டெல்டா... மக்களை ஏமாற்றும் திறனற்ற ஆட்சி! தஞ்சையில் வெடித்த விவசாயிகளின் ஆவேசக் கண்டனம்!"

​”பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்களும், கைகட்டி வேடிக்க பார்க்கும் அரசும்!”
​ஆடிப்பெருக்குத் திருநாளM அன்று கூட காவிரி டெல்டா ஆறுகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிப்பது இந்த அரசின் மாபெரும் நிர்வாகத் தோல்விக்குச் சாட்சியாகும். உரிய காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால், குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியாமல் தவித்த விவசாயிகள், தங்களின் சம்பா சாகுபடியின் கதியென்ன என்ற அச்சத்தில் பரிதவித்து வருகின்றனர்.

we-r-hiring

​”தேர்தல் வாக்குறுதிகளில் ஏமாற்று வேலை – வீதிக்கு வந்து போராடும் விவசாயிகள்!”
​ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தக் கோட்டை நோக்கிச் சென்ற விவசாயிகளைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் அடக்குமுறைப் போக்கே இந்த ஆட்சியின் லட்சணமாக மாறிவிட்டது .

​”எல்லாவற்றிற்கும் மேலாக சட்டப்பேரவையும் மக்கள் மன்றமும் எச்சரிக்கை!”
​மேகதாது அணை விவகாரத்திலும், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலும் மெத்தனமாகச் செயல்படும் அரசைச் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கடுமையாக அம்பலப்படுத்தத் தயாராகி வருகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை உடனடியாக வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பதோடு, ஏக்கருக்குரிய நிவாரணத்தையும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியையும் வழங்காவிட்டால், மக்கள் மன்றத்தில் கடுமையான போராட்டம் வெடிக்கும் என்று ஆளுங்கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்தில்!”: தவெக ஆட்சியின் மீது நைனார் நாகேந்திரன் பகீர் தாக்கு!

MUST READ