Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை: தூத்துக்குடியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேட்டி!

தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை: தூத்துக்குடியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேட்டி!

-

- Advertisement -

திமுகவினரை கைது செய்து முடக்கிவிட முடியாது என்றும், தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் வராது என்றும் விளாத்திகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் எச்சரித்துள்ளார்.தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை: தூத்துக்குடியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேட்டி!

கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள அவர், நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.

we-r-hiring

திமுகவை எவராலும் முடக்க முடியாது செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கூறியதாவது: “திமுகவினரைக் கைது செய்து முடக்க முடியுமா? அப்படி எல்லாம் யாராலும் முடக்க முடியாது. தி.மு.க. எதற்கும் அச்சப்படும் கட்சி கிடையாது. ஜனநாயகம் எங்கு மறுக்கப்படுகிறதோ, அது வெற்றிடமாகிவிடும். ஜனநாயக முறையில் கருத்துகளைச் சரியான முறையில் எடுத்துவைக்கக் கூடிய அரசியல் கட்சி தி.மு.க.

மேலும், “இந்த அரசு தீவிரவாதிகளை நடத்துவது போல எங்களை நடத்துகிறது. சர்வதேச கிரிமினல் போல எங்கு திரும்பினாலும் காவல்துறையைக் குவித்து பயம் காட்டுகிறார்கள். ஜனநாயகத்தின் மிகப்பெரிய தூணான சட்டமன்றம் முடக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாது,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

பட்ஜெட்டில் வாக்குறுதிகள் இல்லை தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து விமர்சித்த அவர், “தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எந்தவிதத் திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை. தமிழ்நாட்டில் முதலீடுகள் குறைந்துவிட்டன; தொழில் செய்ய வந்தால் வழக்கு போட்டுவிடுவார்களோ என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகிறார்கள். வாலியில் இருந்தால் தான் அகப்பைக்குள் வரும், ஆனால் மக்கள் எதிர்பார்த்த எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை” என்றார்.

சேகர்பாபு விவகாரம் மற்றும் சட்டமன்றப் பேச்சு சேகர்பாபு தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து: “பகவான் காத்திருக்கக்கூடிய நிலையைக் கொடுத்திருக்கிறார், பக்திபரவசத்துடன் பொறுமையாக இருந்து அவர் சாமி கும்பிடுகிறார்,” என்றார்.

தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை: தூத்துக்குடியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேட்டி!

சட்டமன்றப் பேச்சு குறித்த விளக்கம்: நேற்று சட்டசபையில் நான் பேசியதை மறந்துவிடுங்கள் என்று சபாநாயகரிடம் சொன்னேன். தூத்துக்குடி மண்ணுக்குரிய வேகம், விவேகத்தைத்தான் நான் வெளிப்படுத்தினேன். அதைத் தேவையில்லாமல் சட்டசபையில் இழுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதற்காகவே அவ்வாறு கூறினேன்,” என்றார்.

சிறுபான்மையினர் உரிமையில் கை வைக்காதீங்க! – ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

MUST READ