Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்"நாங்க தான் கெத்து!" - ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா... 'பஞ்ச்' காரின்...

“நாங்க தான் கெத்து!” – ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா… ‘பஞ்ச்’ காரின் சீக்ரெட் என்ன?

-

- Advertisement -

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், கடந்த ஜூலை மாத கார் விற்பனையில் 58 சதவீத அபார வளர்ச்சியப் பதிவு செய்து அசத்தியுள்ளது."நாங்க தான் கெத்து!" - ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா... 'பஞ்ச்' காரின் சீக்ரெட் என்ன?

விற்பனை உயர்வு & டாடா பஞ்ச் மாஸ்!
கடந்த 2025-ஆம் ஆண்டின் ஜூலை மாத விற்பனையோடு ஒப்பிடுகையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கூடுதலாக 62,611 கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட விற்பனை வளர்ச்சிக்கு அதன் புகழ்பெற்ற மைக்ரோ எஸ்.யு.வி (Micro SUV) மாடலான ‘டாடா பஞ்ச்’ (Tata Punch) கார் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 21,313 டாடா பஞ்ச் கார்கள் விற்பனை ஆகி, வாடிக்கையாளர்களின் பேராதரவைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

we-r-hiring

ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்கள்
வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, நவீன தொழில்நுட்ப வசதிகள், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் பெட்ரோல், சி.என்.ஜி, மின்சாரம் (EV) எனப் பல்வேறு தேர்வுகளில் கார்களை வழங்குவது ஆகியவையே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த அபார விற்பனை வளர்ச்சிக்குக் காரணம் என ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய வாகனச் சந்தையில் டாடா நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சி, போட்டி நிறுவனங்களுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு பை பை! – இந்தியாவில் எகிறிய மின்சார வாகன விற்பனை: மிரளவைக்கும் புள்ளிவிவரம்! 

MUST READ