Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பெட்ரோல், டீசலுக்கு பை பை! - இந்தியாவில் எகிறிய மின்சார வாகன விற்பனை: மிரளவைக்கும் புள்ளிவிவரம்! 

பெட்ரோல், டீசலுக்கு பை பை! – இந்தியாவில் எகிறிய மின்சார வாகன விற்பனை: மிரளவைக்கும் புள்ளிவிவரம்! 

-

- Advertisement -

இந்திய வாகனச் சந்தையில் சுற்றுச்சூழல் தோழமை கொண்ட மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 3,27,901 மின்சார வாகனங்கள் விற்பனையாகி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) தெரிவித்துள்ளது.பெட்ரோல், டீசலுக்கு பை பை! - இந்தியாவில் எகிறிய மின்சார வாகன விற்பனை: மிரளவைக்கும் புள்ளிவிவரம்! 66 சதவீதம் அபார வளர்ச்சி
இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு, மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு காரணமாக மக்கள் அதிகளவில் மின்சார வாகனங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மின்சார வாகன விற்பனை 66 சதவீதம் வரை அதிரடி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

8-ல் ஒரு வாகனம்வாகனம்‘!
வாகன விற்பனை புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் விற்பனையான ஒவ்வொரு 8 வாகனங்களில் ஒன்று மின்சார வாகனமாக (1 in 8 vehicles) இருந்தது குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள் (ஆட்டோ) மற்றும் நான்கு சக்கர பயணிகள் வாகனப் பிரிவுகளில் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நகரப் பகுதிகளில் தினசரி பயணங்களுக்குப் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சார வாகனங்களையே பெருமளவில் தேர்வு செய்து வருகின்றனர். ஆட்டோமொபைல் துறையின் இந்த அபார வளர்ச்சி, இந்தியாவில் மின்சார வாகனப் புரட்சி அதிவேகமாக உருவெடுத்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கார் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! Tata Nexon Camo Edition அறிமுகம்: ரூ.9.99 லட்சத்தில் புதிய மாடல்!

we-r-hiring

MUST READ