- Advertisement -
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் மே 14 வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாவதால் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரை திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேபோல் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மோச்சா புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.