Homeசெய்திகள்க்ரைம்சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக்...

சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – மலேசியப் பயணி கைது!

-

- Advertisement -

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திக் கொண்டுவரப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புடைய உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மலேசிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் - மலேசியப் பயணி கைது!

ரகசியத் தகவலும், தீவிரக் கண்காணிப்பும்
தாய்லாந்து நாட்டிலிருந்து பெருமளவில் போதைப்பொருட்கள் சென்னைக்கு விமானம் மூலம் கடத்தப்பட உள்ளதாகச் சுங்கத்துறைக்குப் ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு (Air Intelligence) அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

we-r-hiring

நேற்று நள்ளிரவு பாங்காக்கில் இருந்து சென்னை வந்தடைந்த சர்வதேச விமானப் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர். அப்போது, சுற்றுலாப் பயணிகள் விசாவில் தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த மலேசிய நாட்டைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவர், சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய பொருட்கள் எதுவும் தன்னிடமில்லை எனக் கூறி ‘கிரீன் சேனல்’ (Green Channel) வழியாக வெளியே செல்ல முயன்றார்.

சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்
அந்தப் பயணியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையின்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், அவரைச் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரது உடமைகளைத் தீவிரமாகச் சோதனையிட்டனர்.சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் - மலேசியப் பயணி கைது!

அப்போது அவர் கொண்டுவந்த சூட்கேசிற்குள் தனித்தனியாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த 4 பார்சல்களில் உயர்ரக பதப்படுத்தப்பட்ட ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ (Hydroponic Cannabis) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 4 கிலோ 33 கிராம் எடைக் கொண்ட இந்தப் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு சுமார் 4 கோடி ரூபாயாகும்.

‘கடத்தல் குருவி’ அதிர்ச்சித் தகவல்
இதனைத் தொடர்ந்து மலேசிய நாட்டுப் பயணியைக் கைது செய்த சுங்க அதிகாரிகள், அவரிடமிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை முழுமையாகப் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்காக ‘கடத்தல் குருவி’யாக (Courier)ச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்தச் சர்வதேச கும்பல் கொடுத்தனுப்பிய இந்தப் பார்சலைச் சென்னையில் யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? இந்த வலையமைப்பில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் யார்-யார்? சென்னையில் இவர்கள் எங்கு இருந்து செயல்படுகிறார்கள்? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து கோடி கணக்கிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே ஓடும் லாரியில் துணிகரம்: எலக்ட்ரிக்கல் லாக்கை உடைத்து ₹25 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், போன்கள் கொள்ளை!

MUST READ