Homeசெய்திகள்க்ரைம்பல்லடத்தில் கோரச் சம்பவம்: இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் மற்றும் மகளை வெட்டிக் கொன்ற...

பல்லடத்தில் கோரச் சம்பவம்: இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் மற்றும் மகளை வெட்டிக் கொன்ற காதலன் கைது!

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் காதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக ஆத்திரமடைந்த காதலன், கல்லூரிப் பெண்ணையும் அவரது தாயாரையும் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

நிகழ்ந்த விபரம் என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி – தனலட்சுமி தம்பதியினர். பனியன் தொழிலாளிகளாக வேலை பார்த்து வரும் இவர்களது மகள் பூவரசி (கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்).

இன்று காலை பழனிச்சாமி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்போது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அக்கம் பக்கத்தினர் துணையுடன் சிக்கிய கொலையாளி

இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்-மகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற கொலையாளியை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பல்லடம் டி.எஸ்.சி. பார்த்திபன் மற்றும் காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

பொதுமக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின:

  • இன்ஸ்டாகிராம் பழக்கம்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பவனும், பூவரசியும் கடந்த 5 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர்.

  • ரகசியத் திருமணம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், பூவரசி தனது பெற்றோர் வீட்டிலேயே தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

  • எதிர்த்த தாய்: பூவரசியின் தாயார் தனலட்சுமிக்கு இந்த விவகாரம் தெரியவந்ததும், அவர் மகளைக் கண்டித்து அக்ஷய்யுடன் பேசக்கூடாது எனத் தடை விதித்துள்ளார்.

  • தவிர்த்த காதலி: தாயின் கண்டிப்பால் பூவரசியும் அக்ஷய்யிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய், இன்று காலை நேராக பூவரசியின் வீட்டிற்கு வந்து தாய் மற்றும் மகள் இருவரையும் தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கொலைச் செயலில் ஈடுபட்ட அக்ஷயைக் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயையும், மகளையும் காதலனே வீடு புகுந்து படுகொலை செய்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கண்ணீருக்கும் உள்ளாக்கியுள்ளது.

“வெறிநாய்க்கடி இல்லாத சென்னை”: மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

MUST READ