Homeசெய்திகள்தமிழ்நாடுபொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்: பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ நித்தியானந்தன் வலியுறுத்தல்!

பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்: பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ நித்தியானந்தன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

கள் இறக்க அனுமதி, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் | கொப்பரைக்குக் கூடுதல் ஆதார விலை கேட்கும் தென்னை விவசாயிகள்.பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்: பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ நித்தியானந்தன் வலியுறுத்தல்!தமிழகச் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பொள்ளாச்சி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தன், பொள்ளாச்சியைக் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உட்படத் தென்னை விவசாயிகள் மற்றும் கோவை மாவட்ட மக்களின் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார்.

புதிய மாவட்டம் மற்றும் மெட்ரோ ரயில் கோரிக்கை
பொள்ளாச்சி பகுதியின் நிலவியல் அமைப்பு மற்றும் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என நித்தியானந்தன் எம்.எல்.ஏ வலியுறுத்தினார். மேலும், கோவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்தவொரு தெளிவான அறிவிப்பும் வராதது மிகுந்த வருத்தமளிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

தென்னை விவசாயிகளுக்குத் தேவை அதிரடித் திட்டங்கள்
கொங்கு மண்டலத் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பல முக்கிய கோரிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.

  • கள் இறக்க அனுமதி: தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தக் கள் இறக்குவதற்கும், அதை விற்பனை செய்வதற்கும் அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
  • ரேஷன் மற்றும் சத்துணவில் தேங்காய் எண்ணெய்: நியாயவிலைக் கடைகள் (ரேஷன்) மூலம் தேங்காய் எண்ணெய்யை விநியோகிக்க வேண்டும். மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் சமையலுக்குத் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • நேரடி கொள்முதல்: கேரளா மாநில அரசைப் போலத் தமிழக அரசும் விவசாயிகளிடமிருந்து நேரடியாகத் தேங்காய்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், கொப்பரைக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) நிர்ணயம் செய்ய வேண்டும்.

கடன் தள்ளுபடி ஏமாற்றம் & இலவச மின்சாரம்
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லாதது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல, வைப்புத்தொகை (பணம்) செலுத்தி நீண்ட காலமாகப் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திராவிட இயக்கத் தலைவர்களின் ஆலோசனைகள்
தமது உரையின் நிறைவாகப் பேசிய அவர், “அரசியல் பயணத்தில் நமது பாதைகளும் பயணங்களும் வேறாக இருக்கலாம். ஆனால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆட்சி செய்த மூத்த திராவிட இயக்கத் தலைவர்களின் நல்லாலோசனைகளைக் கேட்டு, தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வழிநடத்திப் பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்!

MUST READ