மனித வாழ்க்கையில் மற்றவர்களின் விமர்சனங்களையும் அவமானங்களையும் கடந்து, சுயமரியாதையுடனும் வெற்றியாளராகவும் வாழ்வதற்குச் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு 6 முக்கிய ரகசியங்கள் குறித்து ‘சக்சஸ்ஃபுல் மைண்ட்செட் தமிழ்’ ஊடகம் முக்கியச் செய்தித் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
- விமர்சனங்களை யானை-நாய் உவமையோடு கடந்து செல்லுங்கள்!
நீங்கள் அமைதியாக இருக்கும் வரை உலகம் உங்களைப் பற்றிப் பேசாது; ஆனால் சாதிக்க நினைக்கும் போது தான் விமர்சனங்கள் எழும். ராஜநடை போட்டுச் செல்லும் யானையைக் கண்டு தெரு நாய்கள் குரைப்பதைப் போல, உங்களை விட உயரத்தில் இருக்கும் நபர்களைக் கண்டு பொறாமையால் பேசுபவர்களைப் பொருட்படுத்தக் கூடாது. அவற்றுக்குப் பதில் சொல்வது நமது தகுதியைக் குறைத்துவிடும்.

- எதிர்மறை கருத்துகளை ஏற்காதீர்கள்!
“யாரோ ஒருவர் நீட்டும் அழுக்குப் பையை நாம் வாங்காதது போல, மற்றவர்கள் தரும் எதிர்மறையான கருத்துகளையும் நாம் ஏற்கக் கூடாது. நாம் பிறரைத் திருப்திப்படுத்தப் பிறக்கவில்லை; நமது லட்சியத்திற்கு மட்டுமே உண்மையாய் இருக்க வேண்டும். மரியாதை என்பது கேட்டுப் பெறுவது அல்ல, நமது வளர்ச்சியைக் கண்டு உலகம் தானாகத் தருவது” எனச் சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
- உணர்ச்சிகளை உங்கள் கட்டுப்பாட்டில் வையுங்கள்!
யாராவது ஒரு வார்த்தை திட்டினால் உடனே கோபப்படுவதும், அவமானப்படுத்தினால் அழுவதும் நமது வாழ்க்கையின் ‘ரிமோட் கண்ட்ரோலை’ பிறரிடம் கொடுப்பதற்குச் சமம். சேற்றை அள்ளி வீசுபவர் மீது நாமும் சேற்றை வீசினால் இருவருமே அழுக்காவோம்; விலகிச் செல்வதே சிறந்தது. மனதை ஆழ்கடல் போல அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
- இலக்கில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்!
வாழ்க்கையின் லட்சியத்தில் கவனம் செலுத்தும் போது, சுற்றியிருக்கும் சத்தங்கள் நம் காதில் விழக் கூடாது. லேசர் கதிர் போல கவனம் ஒரே புள்ளியில் குவிய வேண்டும். தடைகளும் விமர்சனங்களும் வரவில்லை என்றால் நாம் தவறான பாதையில் பயணிக்கிறோம் என்று அர்த்தம்; தடைகளே நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான சாட்சிகள்.
- வெற்றியால் மட்டுமே பதில் சொல்லுங்கள்!
சொற்களால் வாதாடுவதை விட நமது வெற்றியே எதிரிகளுக்குச் சரியான பதிலாக அமையும். நாம் ஜெயித்த பிறகு, நம்மை அவமானப்படுத்திய அதே உலகம் நம்மைத் தேடி வந்து பாராட்டும்.
- சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளுங்கள்!
மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு முன்பாக, நம்மை நாமே மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். “எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! இலக்கை அடையும் வரை நிற்காதீர்கள்!” என்ற விவேகானந்தரின் வீர முழக்கத்தை மனதில் ஏந்தி, பயத்தையும் தயக்கத்தையும் தூக்கி எறிந்து கம்பீரமாகச் செயலாற்ற வேண்டும்.
இந்த 10 விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாதீங்க! — உங்களைக் காக்கும் ரகசியம்!
