

ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டும் சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார். அவருடைய செயல்பாடுகள், நடவடிக்கைகள் மீது தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்கும்போது அவர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று ஆவடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்களானவர்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
கேப்டன் மில்லர் படத்தின் புதிய அறிவிப்புகள்!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில் மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற்சாலைகள், சில தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. ஆவடி தொழிலாளர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதி என்று கூறலாம்.
கடந்த 2011- ஆம் ஆண்டு பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரித்து ஆவடி சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அப்துல் ரஹீமும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாமோதிரன் என்பவரும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் அப்துல்ரஹிம் 43,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆவடி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரவைக்கு அனுப்பப்பட்ட முதல் உறுப்பினர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அப்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் கழித்து மூன்றாம் ஆண்டு தொடங்கும்போது அப்துல் ரஹீம்முக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவியை வழங்கி கௌரவித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.
அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் ஆவடி தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவரான மாஃபா பாண்டியராஜன் போட்டியிட்டு 1359 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட சா.மு.நாசர் தோல்வியை தழுவினார்.
அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..
அந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற மாஃபா. பாண்டியராஜன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரானார். எனினும், அந்த பதவியில் அவர் சில மாதங்களே தொடர்ந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அணியாகவும், ஓபிஎஸ் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர். அதில் ஓபிஎஸ் அணியின் பக்கம் பாண்டியராஜன் சென்றதால் முக்கியத்துவத்தை இழந்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி துறை பொறுப்பு வழங்கப்பட்டது. முக்கியத்துவம் இல்லாத டம்மி பதவியில் அந்த ஐந்தாண்டு காலத்தை கடத்தினார்.
ஆனாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி காலம் முழுவதும், அமைச்சர் பதவியை வகித்த பெருமையை மாஃபா பாண்டியராஜன் பெற்றுள்ளார்.
‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி!
2021- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சா.மு.நாசர், பாண்டியராஜனை விட 55 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்றார். அவருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பால்வளத்துறை என்ற முக்கிய துறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அவரின் செயல்பாடுகளின் மீது அதிர்ப்தி அடைந்த முதலமைச்சர் இரண்டு ஆண்டுளில் பதவி நீக்கம் செய்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முதல் நபர் சா.மு.நாசர் என்ற இடத்தையும் பிடித்தார்.

ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் குறுகிய காலத்திலேயே அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதினாலும், குறுகிய காலம் வரை பதவியில் நீடிப்பதினாலும் ஆவடி மக்கள், இந்த தொகுதிக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என்று புலம்பி வருகின்றனர்.
மூன்று முறையும் அமைச்சர்கள் கண்ட தொகுதி ”ஆவடி” என்ற பெருமிதம் கொள்கின்றனர். ஆனாலும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து அமைச்சர் பதவி கிடத்தது. இன்னொருவருக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அமைச்சராக நீடிக்க முடிந்தது. ஐந்தாண்டுகள் பதவியில் நீடித்திருந்த பாண்டியராஜன் டம்மி அமைச்சராகவே இருந்தார்.
ஆவடி தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு மட்டுமே சோதனைக்கு மேல் சோதனை ஏற்படுகிறது.