
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 11) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம், 20,000 கோடி ரூபாய் முதலீட்டில், தொழிற்சாலையை நவீனமயமாக்கல் மற்றும் நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின் வாகன மின்கலன் ஒன்று கூட்டப்பட்ட தொகுப்பு, மின் வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களை மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

“மணிகண்டன் கொண்டாடப்பட வேண்டியவர்”… மனதாரப் பாராட்டிய பாடகி சின்மயி!
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாக, 2 லட்சம் பேருக்கு மறைமுகமாக வேலை கிடைக்கும். தொழில்துறை ஏற்கனவே முன்னேறியுள்ளது; இனிமேலும் உயரப் போகிறது. புதிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புகிறேன். மின்சார வாகன உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.