சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து நாட்டின் 80-வது சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தற்போது மதுரையில் தங்கியுள்ளார். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள உள்ளூர் கிராமத்திற்கு அவர் நேரில் சென்றார்.

எளிய மனிதர்களுடன் கொண்டாட்டம்:
கிராமத்திற்குச் சென்ற சிவகார்த்திகேயனை அப்பகுதி மக்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடம் அன்போடு உரையாடிய அவர், கிராம மக்களுடனும் குழந்தைகளுடனும் இணைந்து தேசியக் கொடியேற்றிச் சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
கிராம மக்கள் மகிழ்ச்சி:
திரைத்துறையின் முன்னணி நடிகராக இருந்தபோதிலும், ஆடம்பரமின்றித் தங்களோடு வந்து எளிய முறையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த எளிமையான பண்பை அப்பகுதி கிராம மக்களும் விவசாயிகளும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் கிராமத்து மக்களுடன் இணைந்து சுதந்திர தினத்தைக் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அஷ்வத் மாரிமுத்து – ரஜினி கூட்டணி! ‘தர்மன்’ டீமின் சுதந்திர தின வாழ்த்தால் ஆடிப்போன இணையதளம்!
