இந்தியாவில் கோடிக்கணக்கான கேமிங் பிரியர்களைக் கவர்ந்துள்ள ‘பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா’ (BGMI) விளையாட்டின் குறைந்த அளவு கொண்ட ‘BGMI Lite’ பதிப்பு, இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் களமிறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறைந்த பட்ஜெட் போன்களுக்கும் ஏற்ற கேமிங்
குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2GB RAM-க்கும் குறைவான நினைவகத் திறன் கொண்ட போன்களைப் பயன்படுத்தும் இந்திய கேமர்களைக் கருத்தில் கொண்டு, Krafton நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் அதிக ரேம் மற்றும் சேமிப்பக வசதி இல்லாத எளிய ஸ்மார்ட்போன்களிலும் எவ்விதத் தடங்கலுமின்றி கேம் விளையாட முடியும்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் வசதி
Krafton நிறுவனத்தின் திட்டத்தின்படி, ஆண்ட்ராய்டு பயனர்கள் வெறும் 1GB RAM கொண்ட போன்களிலேயே BGMI Lite கேமைச் மிகச் மென்மையாக விளையாட முடியும். அதேபோல, ஆப்பிள் iOS பயனர்கள் 2GB RAM கொண்ட சாதனங்களில் விளையாடும் வகையில் இச்சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எளிய ஸ்மார்ட்போன்களிலும் உயர்தர கேமிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் இந்த ‘BGMI Lite’ வெளியீட்டு அறிவிப்பு, மொபைல் கேமிங் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
