Homeசெய்திகள்மாவட்டம்கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றமே வழக்கின் தகுதி (Merit) அடிப்படையில் விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள் மற்றும் 11 நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

we-r-hiring

ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாததால் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், 4 மாதங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்குத் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனக் கெடு விதிக்கப்பட்டது. பின்னர், கும்பகோணம் மாநகராட்சி மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், தன் முந்தைய கெடு உத்தரவில் மாற்றம் செய்து நிலையறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு மனு மூலம் மாற்ற முடியாது என்றும், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனுதாரர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது:

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி: “நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. உயர் நீதிமன்றம் கெடு விதித்தும் அதிகாரிகள் தரப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” எனக் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தனர்.

தமிழக அரசு விளக்கம்: “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால் இந்த நிலையில் இதில் தலையிட விரும்பவில்லை. சென்னை உயர் நீதிமன்றமே இவ்வழக்கை மெரிட் அடிப்படையில் விசாரித்து உரிய முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும், உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில், மனுதாரர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெளிவுபடுத்தி மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

MUST READ