
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜூன் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள் தேர்வுகள் முடிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!
இந்த நிலையில், தேர்வுகள் வரும் மே 25- ஆம் தேதி தொடங்கி, ஜூன் 2- ஆம் தேதி வரை நடைபெறும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வருவதற்கு தாமதமாகும் என்பதால், உயர்கல்வியில் சேர முடியாத நிலை ஏற்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
விடைத்தாள்கள் அச்சடிக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் விடுவதற்காக, பேராசிரியர் பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த பணிகளை விரைந்து முடிக்காததே தேர்வுகள் தள்ளிப் போக காரணம் என்று கூறப்படுகிறது.
கதாநாயகன் ஆகும் பிரபல இயக்குனரின் மகன்… வில்லன் ஆன கௌதம் மேனன்!
இது தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகையில், “மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படாத வகையில், தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தனர்.