Homeசெய்திகள்தமிழ்நாடுதொகுதி மறுவரையறை: மக்கள் தொகை அடிப்படையில் அமைந்தால் தமிழகத்திற்குப் பெருமளவில் பாதிப்பு - காங்கிரஸ் எம்.பி....

தொகுதி மறுவரையறை: மக்கள் தொகை அடிப்படையில் அமைந்தால் தமிழகத்திற்குப் பெருமளவில் பாதிப்பு – காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை

-

- Advertisement -

மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், அது தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.தொகுதி மறுவரையறை: மக்கள் தொகை அடிப்படையில் அமைந்தால் தமிழகத்திற்குப் பெருமளவில் பாதிப்பு - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசியல் சூழலைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கெடுத்திருப்பதும், கட்சியின் சார்பில் இருவர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருப்பதும் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

we-r-hiring

கூட்டணி குறித்த விளக்கம்
தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பல்வேறு தனிப்பட்ட கருத்துகளை ராகுல் காந்தியிடம் முன்வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், அனைத்துக் தலைவர்களுடனும் விரிவாக ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் தேவையின்றி விமர்சித்து வருவதாகவும் அவர் சாடினார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு
நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிரிக்கும்போது மக்கள் தொகையை மட்டுமே காரணியாகக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்திய கார்த்தி சிதம்பரம், “தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே எந்தக் காலத்திலும் நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்; நாம் அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது. அனைவருக்கும் 50 சதவீதம் கூட்டுவது என்பது தவறான தாக்கம்” என்று கூறினார்.

மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பாகத் தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியான எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும், ஆனால் தற்போது அதில் சற்று மென்மையான போக்கு தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத (மூன்றில் ஒரு பங்கு) இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவு அளித்ததை நினைவுகூர்ந்த அவர், தேர்தல் களத்தில் பெண்களுக்குப் போதிய வாய்ப்புகள் மறுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சி உட்பட எந்தவொரு அரசியல் கட்சியும் பெண்களுக்கு உரிய எண்ணிக்கையில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாமல்லபுரத்தில் தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு

MUST READ