Homeசெய்திகள்தமிழ்நாடுஆளும் த.வெ.க அரசு மீது சிபிஎம் பாய்ச்சல்: தலைமைச் செயலாளரை தூக்கக் கோரி பெ.சண்முகம் ஆவேசம்!

ஆளும் த.வெ.க அரசு மீது சிபிஎம் பாய்ச்சல்: தலைமைச் செயலாளரை தூக்கக் கோரி பெ.சண்முகம் ஆவேசம்!

-

- Advertisement -

மத்திய அரசின் உத்தரவின் பேரிலும் அழுத்தத்தினாலும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சி மீதே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பெ. சண்முகம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.ஆளும் த.வெ.க அரசு மீது சிபிஎம் பாய்ச்சல்: தலைமைச் செயலாளரை தூக்கக் கோரி பெ.சண்முகம் ஆவேசம்!

தலைமைச் செயலாளர் பதவி நீட்டிப்புக்குக் கண்டனம்
திறமை வாய்ந்த பல அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருக்கும்பொழுது, ஏற்கனவே பதவிக்காலம் முடிந்த ஒரு அதிகாரிக்கு ஏன் மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். அந்த அதிகாரி தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்டவிரோதமானது என்றும், அவரை உடனடியாக அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த கட்சி மீதே தலைமைச் செயலாளர் இப்படித் தாறுமாறாக நடந்துகொள்வது ஏன் என்றும் அவர் ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

we-r-hiring

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே கூட்டுச் சதிச் சந்தேகம்
பிரதமர் ‘அர்பன் நக்சல்கள்’ கணக்கெடுக்கப்படுவார்கள் என்று கூறியதிலிருந்து, அடுத்தடுத்த நாட்களில் தலைமைச் செயலாளரும், அதனைத் தொடர்ந்து வட்டாட்சியரும் உத்தரவுகளைப் பிறப்பிப்பதைச் சுட்டிக்காட்டிய பெ. சண்முகம், இதை இணைத்துப் பார்த்தால் மத்திய – மாநில அரசுகள் இணைந்து ஏதேனும் சதியில் ஈடுபடுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது என்றார். மேலும், மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது என்றால், நிர்வாகத்தை நடத்துவோருக்கு எங்கே புத்தி போய்விட்டது என அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் ஒழிப்பு நடவடிக்கை: அரசின் ‘வாட்ஸ்அப்’ செயல்திட்டத்தை சாடிய உயர்நீதிமன்றம் – தொடரும் சர்ச்சைகள்!

MUST READ