Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஐபோன் பிரியர்களுக்கு அதிர்ச்சி: புதிய ஐபோன் மாடல்களின் விலை 9% வரை உயர்கிறது!

ஐபோன் பிரியர்களுக்கு அதிர்ச்சி: புதிய ஐபோன் மாடல்களின் விலை 9% வரை உயர்கிறது!

-

- Advertisement -

அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் மாடல்களின் விலையை சுமார் 9 சதவீதம் வரை உயர்த்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐபோன் பிரியர்களுக்கு அதிர்ச்சி: புதிய ஐபோன் மாடல்களின் விலை 9% வரை உயர்கிறது!

ஸ்மார்ட்போன் உற்பத்திக்கான மெமரி சிப்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

we-r-hiring

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

  • உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு: ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மெமரி சிப் மற்றும் சிலிக்கான் சில்லுகளின் தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வு, நிறுவனத்தின் லாப வரம்பைப் பாதித்துள்ளது.
  • போட்டி நிறுவனங்களின் முடிவு: ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் உதிரிபாகங்களின் விலை உயர்வைச் சமாளிக்கச் சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களின் விலையை தோராயமாக $100 டாலர் வரை உயர்த்தியுள்ளன.
  • ஆப்பிள் நிறுவனத்தின் திட்டம்: போட்டி நிறுவனங்களின் இந்த விலை உயர்வு முடிவைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனமும் தனது வரவிருக்கும் புதிய ஐபோன் மாடல்களின் விலையை 9% வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் மற்றும் ஐபேட் மாடல்களின் விலையை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது அடுத்த மாதம் வரவுள்ள புதிய ஐபோன் மாடல்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தவுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோவின் 10-ஆம் ஆண்டு கொண்டாட்டம்: மீண்டும் களமிறங்கும் ‘ஜியோ பிரைம்’ — ரூ.300-ல் அதிரடி சலுகைகள் அறிவிப்பு!

MUST READ