பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய பிரபல திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான தேவன், விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மீடியா மூலம் வந்த அழைப்பு
சமீபத்தில் பாஜகவில் இருந்து தனது ராஜினாமா முடிவை அறிவித்த நடிகர் தேவன், அது குறித்துப் பேசுகையில்:

என்னுடைய ராஜினாமாவை மீடியா மூலம் பார்த்த தமிழ்நாட்டு முதல்வர் விஜய், சில நிர்வாகிகள் மூலம் தவெக-வில் இணைய விருப்பம் இருக்கிறதா எனக் கேட்டார்.என்று தெரிவித்துள்ளார்.
மூத்த நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ்
தவெக நிர்வாகிகளின் அழைப்பைத் தொடர்ந்து, அவர்களிடம் நீண்ட உரையாடலை நிகழ்த்தியதாகக் கூறிய தேவன், அதன் பின்னர் கட்சியின் சீனியர் நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகவும் விரிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுடைய கொள்கைகளுக்கு முழுமையாகச் சம்மதிப்பதாகத் தெரிவித்த அவர், அதன் காரணமாக விஜய்யை தனிப்பட்ட முறையில் நேரடியாகச் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
செப்டம்பர் 10-இல் சந்திப்பு & இணைப்பு
இது குறித்துத் தொடர்ந்து பேசிய அவர், “வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி எனக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். அன்றைய தினம் அனேகமாக நான் தவெக-வில் கடவுள் அருளால் இணைவேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய நடிகர் தேவன், தவெகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ள இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
