Homeசெய்திகள்தமிழ்நாடுகஜானாவை காலி செய்யும் திட்டமா?.. "கரண்ட் பில் உயர்வு ஒரு பக்கம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மறுபக்கம்!".....

கஜானாவை காலி செய்யும் திட்டமா?.. “கரண்ட் பில் உயர்வு ஒரு பக்கம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மறுபக்கம்!”.. விஜய் அரசை விளாசிய கோடீஸ்வரன்!

-

- Advertisement -

எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் அரசின் முடிவு சரியா? நிதி நெருக்கடி சூழலில் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன் சிறப்பு அலசல்!கஜானாவை காலி செய்யும் திட்டமா?.. "கரண்ட் பில் உயர்வு ஒரு பக்கம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மறுபக்கம்!".. விஜய் அரசை விளாசிய கோடீஸ்வரன்!

பத்திரிகையாளர் பழ கருப்பையா எழுதிய “எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு கார் கொடுப்பதா?” என்ற கட்டுரை குறித்துப் பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தனது விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளாா்.

we-r-hiring

கடும் நிதி நெருக்கடியும் கார் அறிவிப்பும்
“பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் தனியார் மயமாக்கப்பட்டு வரும் சூழலிலும், பற்றாக்குறை நிலவும் நிலையிலும் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு செலவில் கார் வழங்குவது அவசியமா எனப் பழ கருப்பையா கேள்விகளை எழுப்பியுள்ளார். நல்லது கெட்டது, கல்யாணம் மற்றும் கருமாதி நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கா இந்தக் கார் பயன்படப் போகிறது என்று காரமான விமர்சனங்களையும், எம்.எல்.ஏ-வாகத் தனது அனுபவப் பகிர்வுகளையும் அவர் முன்வைத்துள்ளார். மேலும், இந்த முடிவை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) நிலைப்பாட்டையும் அவர் விமர்சித்துள்ளார்.”கஜானாவை காலி செய்யும் திட்டமா?.. "கரண்ட் பில் உயர்வு ஒரு பக்கம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மறுபக்கம்!".. விஜய் அரசை விளாசிய கோடீஸ்வரன்!

மக்கள் எதிர்பார்ப்பும் தனிப்பட்ட பலன்களும்
“மின்கட்டண உயர்வு போன்ற அன்றாடப் பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில், புதிய அரசு மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மக்களுக்குச் செய்ய வேண்டிய திட்டங்களை விடத் தனிப்பட்ட நபர்களுக்கான பலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திமுக எம்.எல்.ஏ-க்கள் காரை வேண்டாம் என்று கூறிய நிலையிலும், 100 கார்களை வாங்குவது என்பது ஆடம்பரமான செலவே ஆகும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அலுவல் ரீதியாக உதவியாளர் (PA) நியமிப்பது நியாயமானது; ஆனால், கவுன்சிலர்கள் முதல் எம்.எல்.ஏ-க்கள் வரை ஏற்கெனவே பல கார்களை வைத்திருக்கும் நிலையில், அரசு கார் வழங்குவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.”

கடன் சுமையும் பட்ஜெட் வினாக்களும்
“அரசின் பற்றாக்குறை ₹50,000 கோடியைத் தாண்டி, கடன் சுமை ₹20 லட்சம் கோடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. லஞ்சத்தைக் குறைத்து ₹15,000 கோடி ஈட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது பட்ஜெட்டிலோ அல்லது மக்களுக்குச் சென்றடையும் இலவச மின்சாரம், பட்டதாரிகளுக்கான உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களிலோ எதிரொலிக்கவில்லை. அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தொலைநோக்கு வளர்ச்சியை நோக்கி நகர வேண்டிய அரசு, இதுபோன்ற ஆடம்பரச் செலவுகளில் கவனம் செலுத்துவது தொலைநோக்குப் பார்வையின்மையைக் காட்டுகிறது” எனப் பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் குழாய் அடி சண்டை தேவைதானா? — பெ.சண்முகம் கொந்தளிப்பு இடதுசாரி உறுப்பினர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு — சபாநாயகர் நடவடிக்கை குறித்து விமர்சனம்

MUST READ