Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்டா விவசாயிகளுக்கு டபுள் ஜாக்பாட்... நாளை மறுநாள் மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் விஜய்!

டெல்டா விவசாயிகளுக்கு டபுள் ஜாக்பாட்… நாளை மறுநாள் மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் விஜய்!

-

- Advertisement -

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையை, வரும் நாளை மறுநாள் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் வருகை தந்து மலர் தூவி திறந்து வைக்கவுள்ளார்.டெல்டா விவசாயிகளுக்கு டபுள் ஜாக்பாட்... நாளை மறுநாள் மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் விஜய்!

தாமதமான குறுவை பாசனம்
ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் ஜூன் மாதத் தொடக்கத்தில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் பெரும் கவலையில் ஆழ்ந்ததோடு, பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

we-r-hiring

வரலாறு காணாத நீர்வரத்து – 90 அடியை எட்டிய நீர்மட்டம்
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து கடந்த ஒரு வார காலமாக வரலாறு காணாத அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து தற்போது 90 அடியை எட்டியுள்ளது. இதன் மூலம், மேட்டூர் அணை வரலாற்றில் 92-வது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 88.84 அடியாகப் பதிவாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,405 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அணையின் ஒட்டுமொத்த நீர் இருப்பு 51.33 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.

போர்க்கால அடிப்படையில் ஆயத்தப் பணிகள்
முதலமைச்சர் விஜய் நேரடியாக வந்து அணையைத் திறந்து வைக்கவுள்ளதை அடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஆயத்தப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். அணையின் வலது கரை மேல்மட்ட மதகுப் பகுதியில் மின்சார அமைப்புகளைச் சீரமைக்கும் பணியும், முதலமைச்சர் நின்று தண்ணீரைத் திறந்து வைப்பதற்கான பிரத்யேக மேடை அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், முதலமைச்சரின் வருகையை ஒட்டி ஐஜி தலைமையிலான உயர் காவல்துறை அதிகாரிகள் அணைப் பகுதியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

ஆவணி அவிட்டம்: காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் குளத்தைத் திறக்கக் கோரி வழக்கு!

MUST READ