spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுதிரை மீது அதிக பாசம் கொண்ட இளைஞர் தற்கொலை

குதிரை மீது அதிக பாசம் கொண்ட இளைஞர் தற்கொலை

-

- Advertisement -

குதிரை மீது அதிக பாசம் கொண்ட இளைஞர் தற்கொலை

பொள்ளாச்சியை அடுத்த மஞ்ச நாயக்கனூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ஐம்பத்தி நான்கு வயதான பாலசுப்பிரமணியம். இவரது மகன் இருபத்தினான்கு வயதான மோகன பிரசாத். மோகன பிரசாத்துக்கு குதிரை மீது அதிக பாசம் இருந்ததாக தெரிகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

குதிரை மீது அதிக பாசம் கொண்ட இளைஞர் தற்கொலை
இளைஞர் தற்கொலை

இதனால் மோகன பிரசாத் தனது தந்தையிடம் தனக்கென ஒரு குதிரை சொந்தமாக வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாலசுப்பிரமணியம் மோகன பிரசாத்துக்கு குதிரை வாங்கி தர மறுத்துள்ளார்.

we-r-hiring

இக்காரணத்தால் தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதில் மனவேதனை அடைந்த மகன் மோகன பிரசாத் வீட்டில் தூக்கிலிட்டுள்ளார். பின்பு அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகன பிரசாத் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆழியார் காவல் நிலைய போலீசார் மோகன பிரசாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ