Homeசெய்திகள்தமிழ்நாடு"படம் ஓடாதுன்னு முதல்லயே கிளைமாக்ஸ் போடுறீங்களா?" - உதயநிதி ஸ்டாலின் பன்ச்! சட்டப்பேரவையில் சிரிப்பலை!

“படம் ஓடாதுன்னு முதல்லயே கிளைமாக்ஸ் போடுறீங்களா?” – உதயநிதி ஸ்டாலின் பன்ச்! சட்டப்பேரவையில் சிரிப்பலை!

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித் துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது."படம் ஓடாதுன்னு முதல்லயே கிளைமாக்ஸ் போடுறீங்களா?" - உதயநிதி ஸ்டாலின் பன்ச்! சட்டப்பேரவையில் சிரிப்பலை!

மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று, அதன்பின்னர் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்த பிறகே புதிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், இன்றைய கூட்டத்தில் விவாதங்களுக்கு பதிலுரை அளிப்பதற்கு முன்பாகவே துறை சார்ந்த அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை உடனே வெளியிட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்து குற்றம்சாட்டின.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து, அவையில் நடைபெற்ற சினிமா பாணி விவாதம் சட்டப்பேரவையையே சிரிப்பலையில் மூழ்கடித்தது.

தங்கம் தென்னரசுவின் கிளைமாக்ஸ் கேள்வி
இது தொடர்பாகப் பேசிய தங்கம் தென்னரசு, “ஒரு திரைப்படத்திற்கு கிளைமாக்ஸ் என்பது கடைசியாகத்தானே வரும். இரண்டு மணி நேரம் தியேட்டரில் உட்காரப் போகிறோமே என்று படம் பார்க்கச் செல்பவர்களிடம், நுழைந்தவுடனேயே கிளைமாக்ஸைப் போட்டுவிட்டு, அதற்குப் பிறகு முழு படத்தையும் பார்த்து கருத்து சொல்லுங்கள் என்று சொன்னால் அது சரியாக இருக்குமா?” என விசித்திரமான நடைமுறைக்குக் கேள்வி எழுப்பினார்."படம் ஓடாதுன்னு முதல்லயே கிளைமாக்ஸ் போடுறீங்களா?" - உதயநிதி ஸ்டாலின் பன்ச்! சட்டப்பேரவையில் சிரிப்பலை!

சபாநாயகரின் சட்டாரிக்கல் பதில்
இதற்குச் சிரித்தபடியே பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “என்னுடைய கவலை என்னவென்றால், கிளைமாக்ஸையே பார்க்காமல் மக்கள் பாதியிலேயே சென்று விடுவார்களோ என்பதுதான்” என்று நகைச்சுவையாகக் கூறினார். அதற்கு மீண்டும் பதிலளித்துப் பேசிய தங்கம் தென்னரசு, “கிளைமாக்ஸை நாங்கள் நிச்சயமாகப் பார்ப்போம். ‘படுத்துக்கிட்டும் போத்திக்கலாம், போத்திக்கிட்டும் படுத்துக்கலாம்’ என்ற முடிவுக்குப் பேரவைத் தலைவர் வந்துவிட்டீர்களா?” என்று கிண்டலாகக் கேட்டார்.

உதயநிதி ஸ்டாலினின் பன்ச்
அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தியேட்டருக்குள் நுழைந்தவுடனேயே கிளைமாக்ஸைப் போடுகிறார்கள் என்று தங்கம் தென்னரசு சொன்னதற்கு, கிளைமாக்ஸ் என்னவென்றே தெரியாமல் மக்கள் போய்விடுவார்களோ என பேரவைத் தலைவர் சொல்கிறார். படம் நன்றாக இருந்தால் மக்கள் நிச்சயம் கடைசி வரை தியேட்டரில் அமர்ந்து கிளைமாக்ஸைப் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ‘இந்தப் படம் எப்படி ஓடாது, நல்லா இருக்காது; அதனால் முதலிலேயே கிளைமாக்ஸைப் போட்டுவிடுவோம்’ என்று சொல்வது போல் இருக்கிறது” என்று அடுக்க, அவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது."படம் ஓடாதுன்னு முதல்லயே கிளைமாக்ஸ் போடுறீங்களா?" - உதயநிதி ஸ்டாலின் பன்ச்! சட்டப்பேரவையில் சிரிப்பலை!

இரண்டு கிளைமாக்ஸ் – வன்னி அரசு பதில்
இதற்குப் பதிலளித்துப் பேசிய சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, “இப்போதெல்லாம் திரைப்படங்களில் இரண்டு கிளைமாக்ஸ் வைக்கும் கலாச்சாரம் வந்துவிட்டது. மனிதர்கள் எப்போதும் மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்ப மாட்டேன் என்கிறீர்கள், நடைமுறை மாற்றத்தையும் விரும்ப மாட்டேன் என்றால் எப்படி?” என்று திருப்பி அடித்து அவையை கலகலப்பாக்கினார்.  அமைச்சர்களின் பதிலுரைக்கு முன்பே அறிவிப்புகள் வெளியானதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், சினிமா பாணி நகைச்சுவை விவாதங்களால் இன்றைய சட்டமன்ற நடவடிக்கைகள் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் நகர்ந்தன.

சென்னைக்கு 7 அமைச்சர்கள்… 15 மண்டலங்கள்! மழைக்கு முன் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு!

MUST READ