எந்த வேலை செய்தாலும் நீங்க தான் எங்கள் மனதில் முதலில் இருக்கிறீர்கள் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்.. வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்க தொடர்ந்து முயற்சி செய்து பெற்று தருவதாக உறுதி.. ஒவ்வொரு மாற்றுத்திறனாளியை சந்தித்து நலம் விசாரித்து குறைகளை கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சியான செயலுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி..


வீட்டிலேயே முடங்கி இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரிமோட் வசதியுடன் பேட்டரி வாகனம் வழங்கிய காமராஜர் துறைமுகம்
வட சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காமராஜர் துறைமுக நிறுவனத்தின் CSR நிதியின் கீழ் ரூ.16.91 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
காமராஜர் துறைமுக நிறுவனத்தின் CSR நிதியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் Artificial Limbs Manufacturing Corporation Of India (ALIMCO) சார்பில் வட சென்னை மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர், தாங்கல் பகுதியில் உள்ள T.S.S. நாடார்கள் திருமண மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் S.மாலதி ஹெலன் தலைமையில், காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குனர் J.P.ஐரின் சிந்தியா, ALIMCO நிறுவன ஊழியர்கள் மற்றும் வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் 140 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.16,91,978/- மொத்த மதிப்பீட்டில் அவர்களின் தேவைக்கேற்ப காதொலி கருவிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், நடைப்பயிற்சி உபகரணங்கள், ஊன்றுகோல்கள், முழங்கை ஊன்றுகோல்கள், முடக்குவாத சக்கர நாற்காலிகள், சிறப்பு கல்வி கற்றல் உபகரணங்கள், செவித்திறன் கருவிகள், முழங்கைக்கு கீழ்/மேல், முழங்கால் கீழ்/மேல் செயற்கை அவயங்கள் போன்ற பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன்
மாற்றுத்திறனாளி என்று அடிக்கடி கூறக்கூடாது நாமெல்லாம் ஒரே உலகத்திலிருந்து வாழ்கின்றோம். ஒரு சில சின்ன குறைகள் ஏற்பட்டதனால் மாற்றுத்திறனாளிகள் என்று கூறுகிறார்கள். அனைவருக்குமே ஒரு திறமை உள்ளது. விளையாட்டு துறை, தொழில்துறை என பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்; கல்வியில் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே இனம் தான்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பயிற்சிகளை வழங்குவதற்கு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 17 மையங்கள் அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்து சேவை மையத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் அளிக்கப்படுகிறது. பிசியோதெரபி, வாய்ஸ் தெரபி, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேச்சு பயிற்சி, பிசியோதெரபி என உடலில் வெவ்வேறு பாதிப்புகளுக்காக சிகிச்சை பெறுவதற்கு தனியார் பயிற்சி நிலையங்களுக்கு செல்வதற்கு அதிக செலவுகள் ஆகுவதால், அதை செய்ய முடியாமல் பல பேர் வீட்டிலேயே வைத்துள்ளார்கள். அவர்களுக்காகவே தமிழக அரசு உங்கள் பகுதியில் சேவை மையங்களை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக 10 இடங்களில் தொடங்கப்பட்டு கண்ணகி நகர், சாந்தோம், ராயபுரம் போன்ற இடங்களில் செயல்படுகிறது.
மாநகராட்சி இடம் பரிந்துரை செய்து அனைத்து இடங்களிலும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நிதி உதவி கிடைத்தவுடன் அக்டோபர் மாதத்திற்குள் மீதமுள்ள இடங்களில் தொடங்கப்படும். தற்பொழுது சிகிச்சைகள் தேவைப்பட்டால் ராயபுரத்திற்கு கொண்டு சென்று பயிற்சி அளிக்கலாம். ஒருங்கிணைந்த மையத்திற்கு சென்று பயிற்சி அளிக்க முடியாமல் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தால் வீடுகளுக்கு வந்து பயிற்சி அளிப்பார்கள். இந்த சேவைகளை கட்டாயமாக நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்கக் கேட்டுள்ளனர். 275 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். வீட்டு வசதி வாரியம் மூலம் அவற்றை தொடர்ந்து முயற்சி செய்து வாங்கி தர முயற்சிகள் செய்து வருவதாக தெரிவித்தார். குழந்தைகள் விளையாடுவதற்கு டே கேர் சென்டர் கேட்டுள்ளார்கள். எந்த வேலை செய்தாலும் நீங்க தான் எங்கள் மனதில் முதலில் இருக்கிறீர்கள். எங்களால் முடிந்த எல்லா முயற்சியும் எடுத்து முகாம் அமைத்துள்ளனர். காமராஜர் துறைமுகம் சிஎஸ்ஆர் மூலமாக உதவி செய்தால் முதலில் சென்னை மாவட்டத்திற்கு உதவி செய்யுங்கள், அப்புறம் மற்ற மாவட்டங்களுக்கு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இதனை அடுத்து பேட்டரி வாகனம் பெற்ற பயனாளி
ஆறு வருடத்திற்கு முன்பு மீன் பிடி தொழில் செய்யும்போது ஏற்பட்ட விபத்தினால் 85% பாதிப்பு அடைந்து விட்டேன். மூன்று மாதத்திற்கு முன்பு காமராஜர் துறைமுகம், மாற்றுத்திறனாளிகள் நிர்வாகம் மூன்றும் சேர்ந்து எண்ணூரில் முகாம் நடத்தினார்கள். அதில் அனைத்து வகையான மாற்று திறனாளிகளும் வந்திருந்தார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதனை நடத்தி, அதற்கு ஏற்ற மாதிரி தேவையான பதிவு செய்தார்கள்.
ரிமோட் கண்ட்ரோல் உடன் பேட்டரி சக்கர நாற்காலி கொடுத்ததினால் ஒரே இடத்தில் முடங்காமல் பல இடங்களுக்கு செல்ல முடியும். முடக்கத்தில் இருந்து வெளியே போனால் சந்தோஷமாகவும், மெரினா பீச் போனாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சரிவு பாதையால் மகிழ்ச்சி அளிக்கும்.
அதனால் அது கண்டிப்பாக பயன்படும். செயற்கை காலை பொருத்தி தான் செயல்பட்டு வந்தேன், தற்பொழுது இந்த வண்டி மூலம் வெளியில் சுற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் அட்வான்ஸ் நவீன வசதியுடன் வண்டி கொடுத்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.
