Homeசெய்திகள்சென்னைசென்னை கோடம்பாக்கத்தில் 30 சவரன் திருட்டு: ‘குழந்தை சென்டிமென்ட்’ கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் சோளிங்கரில் கைது!

சென்னை கோடம்பாக்கத்தில் 30 சவரன் திருட்டு: ‘குழந்தை சென்டிமென்ட்’ கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் சோளிங்கரில் கைது!

-

- Advertisement -

சென்னை கோடம்பாக்கத்தில் பூட்டியிருந்த வீட்டில் 30 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி ‘மார்க்கெட்’ சுரேஷைத் தனிப்படை போலீசார் சோளிங்கரில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.சென்னை கோடம்பாக்கத்தில் 30 சவரன் திருட்டு: ‘குழந்தை சென்டிமென்ட்’ கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் சோளிங்கரில் கைது!

சென்னை கோடம்பாக்கம், சுப்பிரமணியன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (53) என்பவர், கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி குடும்பத்துடன் சேலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். வீட்டைப் பூட்டி, மெயின் சுவிட்சையும் அணைத்துவிட்டுச் சென்றார்.

we-r-hiring

மறுநாள் காலை, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு விளக்குகள் எரிவதைக் கண்ட பக்கத்து வீட்டு நாராயணன், பாஸ்கருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார். அசோக் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு நடத்தியதில், பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.80 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இருட்டில் நோட்டமிட்டு கைவரிசை:
விசாரணையில், குற்றவாளி சிசிடிவி கேமராக்கள் இல்லாத குடியிருப்புகளைத் தேர்ந்தெடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ள வெளிப்புற விளக்குகளை உடைத்து இருட்டாக்கி, சத்தமில்லாமல் பூட்டை உடைத்துக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது.

சோளிங்கரில் அதிரடி கைது:
கைரேகைத் தடயம் மற்றும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடி வந்த நிலையில், குற்றவாளி வேலூர் மாவட்டம் சோளிங்கரில் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அசோக் நகர் தனிப்படை போலீசார் இருசக்கர வாகனங்களிலேயே சோளிங்கர் விரைந்து சென்று சுரேஷை (49) மடக்கிப் பிடித்தனர்.

25-க்கும் மேற்பட்ட வழக்குகள்:
கைதான கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த ‘மார்க்கெட்’ சுரேஷ் மீது மாம்பலம், நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை என 24-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2020-இல் தி.நகர் நகைக் கடை அதிபர் வீட்டில் ரூ.2.5 கோடி வைர நகைகளைக் கொள்ளையடித்த வழக்கிலும் இவர் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை சென்டிமென்ட் – கொள்ளையனின் புதுமையான வாக்குமூலம்:
கைதான சுரேஷிடம் நடத்திய விசாரணையில் சுவாரசியமான தகவல்கள் வெளியாகின:
குடிபோதையில் சென்டிமென்ட்: கொள்ளையடிக்கும் போது பீரோவில் குழந்தைகள் துணிமணிகள் இருப்பதைப் பார்த்ததும், குழந்தை வைத்திருப்பவர்கள் செலவுக்கு என்ன செய்வார்கள் என யோசித்து, திருடிய பணத்தில் ஒரு பகுதியை பீரோவிலேயே திரும்ப வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

பொருட்களை விட்டுச் சென்றது: குடிபோதையில் இருந்ததால் சில தங்க நகைகளை வெள்ளி என நினைத்து தவறவிட்டுச் சென்றுள்ளார். மேலும் தனது பட்டன் செல்போனையும் சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றதால் கைரேகை மற்றும் தடயங்கள் மூலம் போலீசில் எளிதில் மாட்டிக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட மார்க்கெட் சுரேஷிமிடமிருந்து 25 சவரன் நகைகள் மற்றும் மீதமிருந்த ரொக்கப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

MUST READ