Homeசெய்திகள்சென்னைசரித்திரப் பதிவேடு ரவுடி தலைமையில் மாமூல் கேட்டு மிரட்டல்? கொடுங்கையூரில் மூவர் கைது!

சரித்திரப் பதிவேடு ரவுடி தலைமையில் மாமூல் கேட்டு மிரட்டல்? கொடுங்கையூரில் மூவர் கைது!

-

- Advertisement -

குப்பை கிடங்கு ஒப்பந்ததாரரிடம் ரூ.30 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டல் – சரித்திரப் பதிவேடு ரவுடி உட்பட 3 பேர் கைது!சரித்திரப் பதிவேடு ரவுடி தலைமையில் மாமூல் கேட்டு மிரட்டல்? கொடுங்கையூரில் மூவர் கைது!

சென்னை பெரம்பூரில் குப்பை அள்ளும் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வரும் நபரிடம் மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், சரித்திரப் பதிவேடு ரவுடி உட்பட மூன்று பேரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் (33), கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருநகர சென்னை மாநகராட்சியின் பேசின் பிரிட்ஜ் குப்பைக் கிடங்கில் இருந்து கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்குக் குப்பைகளை எடுத்துச் செல்லும் ஒப்பந்தப் பணியைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி இரவு ராமச்சந்திரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலர், மாதந்தோறும் தங்களுக்கு மாமூல் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே சில கொலைகளைச் செய்திருப்பதாகக் கூறி அவரை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று மூன்று பேரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (38), முரளி (30), அய்யனார் (32) என்பது தெரியவந்தது. இவர்களில் ரஞ்சித்குமார் சரித்திரப் பதிவேடு ரவுடி என்பதும், அவர்தான் ராமச்சந்திரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ரூ.30 ஆயிரம் மாமூல் கேட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

“₹2,200 கோடி நிலுவையை விடுவிக்காமல் இழுத்தடிப்பதா? கோட்டையை முற்றுகையிடுவோம்!” — அரசுக்கு ஒப்பந்ததாரர்கள் பகிரங்க எச்சரிக்கை!

MUST READ