Homeசெய்திகள்சென்னைஉதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு – ஒருவர்...

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

-

- Advertisement -

திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயரழுத்த மின்சாரக் கம்பியில் பேனர் உரசியதில் மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், வாணியன்சத்திரம் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பேனர் உயரழுத்த மின்சாரக் கம்பியில் உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பணியில் இருந்த இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு இளைஞர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் விவரங்கள் மற்றும் விபத்து தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.

வழக்கில் எதிர்தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகப் புகார் – நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதல்

MUST READ