Homeசெய்திகள்தமிழ்நாடு"காங்கிரஸை வெளியேற்றத் துடிக்கும் த.வெ.க! விஜய்யின் பிரதமர் கனவும் தேசிய அரசியலும்!" – மூத்த பத்திரிகையாளர்...

“காங்கிரஸை வெளியேற்றத் துடிக்கும் த.வெ.க! விஜய்யின் பிரதமர் கனவும் தேசிய அரசியலும்!” – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பேட்டி!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க) தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராகக் கட்டமைக்க அக்கட்சியினர் தீவிர முயற்சி செய்து வருவதும், அது தேசிய அளவில் ஏற்படுத்தி வரும் அரசியல் தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தனது கருத்துக்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்."காங்கிரஸை வெளியேற்றத் துடிக்கும் த.வெ.க! விஜய்யின் பிரதமர் கனவும் தேசிய அரசியலும்!" – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பேட்டி!

சமூக வலைதளப் பிரச்சாரமும் ‘பிரதமர்’ பிம்பமும்!

த.வெ.க-வின் தற்போதைய சமூக வலைதள உத்திகள் மற்றும் விஜய் பிரதமர் வேட்பாளராகச் சித்தரிக்கப்படுவது குறித்துப் பேசிய பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன், அக்கட்சி பொய்யான மற்றும் அதீத பிரச்சாரங்களைச் செய்து மக்களை மூளைச்சலவை செய்வதில் கைதேர்ந்தவர்களாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து சமூக வலைதள ஐடிகளையும், ‘இன்ஃப்ளுயன்சர்களையும்’ (Influencers) பயன்படுத்தி இத்தகைய செயற்கையான பிம்பப் பிரச்சாரங்களை அவர்கள் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

we-r-hiring

மேலும், பாகிஸ்தான், ராஜஸ்தான் போன்ற வெளி மாநில மற்றும் வெளிநாட்டு எல்லைப் பகுதிகளிலெல்லாம் “விஜய் பிஎம்” (Vijay for PM) எனப் பேசப்படுவதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 3 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், மக்கள் சந்திக்கக்கூடிய அன்றாடப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், ‘விஜய் பிரதமர் ஆக வேண்டும்’ என்ற கோஷத்தை திட்டமிட்டு எழுப்பி அரசின் தொடக்க காலத் தோல்விகளை மடைமாற்றம் செய்யப் பார்க்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்."காங்கிரஸை வெளியேற்றத் துடிக்கும் த.வெ.க! விஜய்யின் பிரதமர் கனவும் தேசிய அரசியலும்!" – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பேட்டி!

காங்கிரஸுக்குச் சிக்கலும் ராகுல் காந்தி நிலையும்!

கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடனான முரண்பாடுகள் தொடர்பாக அவர் கூறுகையில், வரவிருக்கும் தேசியத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதே காங்கிரஸின் முதன்மை இலக்காக உள்ளது. ஆனால், த.வெ.க திடீரென விஜய்யைப் பிரதமராகப் பிரசாரம் செய்வது கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்குப் பெரிய தலைவலியாகவும் நெருக்கடியாகவும் அமைந்துள்ளது.

இருப்பினும், த.வெ.க தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளப் பிற கட்சி உறுப்பினர்களைக் குதிரை பேரம் மூலம் இழுத்து ஏற்கனவே சட்டமன்றப் பலத்தைச் சேஃப் செய்துவிட்டதால், அவர்கள் காங்கிரஸின் கோபத்தைப் பற்றிக் சிறிதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒருவேளை கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், ராகுல் காந்தியின் பலவீனமான அரசியல் அணுகுமுறையே இத்தகைய சூழலுக்கு முதன்மை மூலகாரணம் என்றும் அவர் சாடினார்."காங்கிரஸை வெளியேற்றத் துடிக்கும் த.வெ.க! விஜய்யின் பிரதமர் கனவும் தேசிய அரசியலும்!" – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பரபரப்பு பேட்டி!

பாஜகவின் ஆதரவும் பின்னணி அரசியலும்!

இந்த அரசியல் நகர்வுகளில் பாஜகவின் பங்கு குறித்துப் பேசிய அவர், பாஜகவைப் பொறுத்தவரை இந்த மோதல் சூழலை அமைதியாக ரசித்துக்கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவது எப்போதுமே ஆளுங்கட்சியான பாஜகவிற்குச் சாதகமாக அமையும் என்பதால் அவர்கள் இதை ஊக்குவிக்கிறார்கள். த.வெ.க எப்போதுமே கொள்கை உறுதி கொண்ட கட்சியோ அல்லது நீண்டகால நன்றி விசுவாசம் கொண்ட இயக்கமோ கிடையாது என்றும், தங்கள் சுய அரசியல் லாபத்திற்காக எந்த நேரத்தில் யாருடன் வேண்டுமானாலும் கைக்கோர்க்கத் தயங்காத சூழல்வாதிகளாகவே செயல்படுகிறார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

தேசிய அளவில் 3-வது அணி சாத்தியமா?

வருங்காலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-வது அணி உருவானால் அதில் தமிழகத்தின் நிலை என்ன என்பது குறித்தும் அவர் விளக்காரமாகப் பேசினார். தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத ஒரு வலுவான 3-வது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகவே உள்ளன. அரவிந்த் கெஜரிவால் அல்லது மம்தா பானர்ஜி போன்ற மூத்த தலைவர்கள் தலைமையில் 3-வது அணி அமையும் பட்சத்தில், தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் தமிழகத்தில் இருந்து திமுகவையே தங்கள் முதன்மைத் தேர்வாகக் கருதும். ஏனெனில் த.வெ.க-வின் முதிர்ச்சியற்ற அரசியல் செயல்பாடுகளையும், வெறும் ரீல்ஸ் மற்றும் மீம்ஸ்களை மட்டுமே நம்பி நடத்தும் தீவிரத்தன்மையற்ற அரசியலையும் தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் ஒருபோதும் தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

“பெண்களின் உரிமையை விற்கும் அரசியல்வாதிகள்! உலகை மிரள வைக்கும் இந்தியப் பொருளாதாரம்!” – ரங்கராஜ் பாண்டே ஆவேசப் பேட்டி!

MUST READ