கடலூரில் கள்ளச்சாரயம் விற்ற 88 பேர் கைது
கடலூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளானர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளானர்.மேலும் மதுக்கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை 7418846100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கடலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளனர்.
இதேபோல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற தீவிர கள்ளச்சாராய வேட்டையில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நேற்று நடைபெற்ற சோதனையில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழவடகரை மற்றும் வடகரை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வீடுகளில் வைத்து மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தங்கப்பாண்டி மற்றும் சுரேஷ் என்ற இரண்டு வாலிபர்களிடம் இருந்து 90க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கைலாசபட்டி மற்றும் T.கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த அம்சகொடி மற்றும் யோகேந்திரன் என்ற இரண்டு இளைஞர்களிடமிருந்து 120க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த தென்கரை காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


