Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் சோகம்: 6 மாடி கட்டிட இடிந்து விழுந்து விபத்து – 5 மாணவர்கள் பரிதாப...

டெல்லியில் சோகம்: 6 மாடி கட்டிட இடிந்து விழுந்து விபத்து – 5 மாணவர்கள் பரிதாப பலி!

-

- Advertisement -

தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் செயல்பட்டு வந்த 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

we-r-hiring

சம்பவம் நடந்தது எப்படி? டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்திருந்த இந்த கட்டடம், மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்தது. இதனால் ஏராளமான மாணவர்கள் இங்கு தங்கி படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் இந்த 6 மாடி கட்டடம் எதிர்பாராதவிதமாக திடீரென இடிந்து விழுந்தது.

தீவிர மீட்புப் பணிகள்: சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் 12 தீயணைப்பு வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதிகாரப்பூர்வ மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பாகவே, அப்பகுதி வாழ் உள்ளூர் மக்கள் தாங்களாகவே மீட்புப் பணியில் ஈடுபட்டு, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.

உயிரிழப்பு மற்றும் காயம்: இந்த விபத்தில் 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சிலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

கட்டிட உரிமையாளர் மீது வழக்கு: இச்சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்: இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில்:

“டெல்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த மனவேதனையளிக்கிறது. இதில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் குறிப்பிட்டுள்ளார்.

கர்பா, தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்குத் தடை! ஆதார் அட்டை கட்டாயம்.. விஹெச்பி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதலால் சர்ச்சை!

MUST READ