Homeசெய்திகள்க்ரைம்36 சவரன் நகை கொள்ளை: காதலித்து கரம்பிடித்த மனைவிக்கு சொகுசு கார், புது நகைகள் -...

36 சவரன் நகை கொள்ளை: காதலித்து கரம்பிடித்த மனைவிக்கு சொகுசு கார், புது நகைகள் – பலே திருடனின் பிளானை உடைத்த காட்பாடி போலீஸ்!

-

- Advertisement -

காட்பாடியில் பூட்டிய வீட்டில் 36 சவரன் நகைகளைக் கொள்ளையடித்து, அதில் கிடைத்த பணத்தில் காதல் மனைவிக்குச் சொகுசு கார் மற்றும் புதிய நகைகளை வாங்கித் தந்த பலே திருடனை அவனது மனைவியுடன் காட்பாடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.36 சவரன் நகை கொள்ளை: காதலித்து கரம்பிடித்த மனைவிக்கு சொகுசு கார், புது நகைகள் - பலே திருடனின் பிளானை உடைத்த காட்பாடி போலீஸ்!

பட்டப்பகலில் அரங்கேறிய கொள்ளை – வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. இவரது கணவர் ரவிக்குமார். இத்தம்பதியினர் கடந்த 27-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

we-r-hiring

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பிற்பகல் 3 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 36 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பினர்.

CCTV காட்சியில் சிக்கிய சொகுசு கார் – புகாரின் பேரில் காட்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் இருந்த CCTV கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அப்போது காட்பாடி டெல் மலைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சொகுசு கார் ஒன்று சுற்றித் திரிவது தெரியவந்தது. உடனே அந்த காரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அதில் இருந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

ஐடி ஊழியர்கள் என நாடகம் – விசாரணையில், காரில் இருந்தது விருதுநகரைச் சேர்ந்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) முத்துவேல் கார்த்திக் மற்றும் அவரது மனைவி பிரபாவதி என்பது வெளிச்சத்திற்கு வந்தது. முத்துவேல் கார்த்திக் மீது விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 9-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உள்ளூரில் திருடினால் பிடிபடுவோம் என்பதால், பிற நகரங்களுக்குச் சென்று தங்களை “ஐடி ஊழியர்கள்” என்று பொய் கூறி வீடு வாடகைக்கு எடுத்துத் தங்குவதைக் கைவந்த கலையாக இவர்கள் வைத்துள்ளனர்.

மனைவிக்கு நகைகள், ₹10 லட்சத்தில் சொகுசு கார் – காட்பாடியில் கொள்ளையடித்த நகைகளை அரக்கோணம் மற்றும் திருத்தணி பகுதிகளில் அடகு வைத்தும், பழைய நகைகளை மாற்றியும் தனது காதல் மனைவி பிரபாவதிக்கு முத்துவேல் கார்த்திக் புதிய நகைகளை வாங்கித் தந்துள்ளார்.

மேலும், நகையை விற்ற பணத்தில் ₹10 லட்சம் மதிப்பில் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி, மனைவி மற்றும் தனது 2 ஆண் குழந்தைகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார்.

தம்பதி கைது – குழந்தைகளின் நிலை? – கணவன்-மனைவி இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த 26 சவரன் நகைகளை மீட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மீதமுள்ள நகைகளை மீட்பதற்காக இருவரையும் காவல் custody எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகத் திருட்டில் ஈடுபட்டு பெற்றோர் இருவரும் சிறைக்குச் சென்றதால், அவர்களின் இரண்டு ஆண் குழந்தைகளும் தற்போது ஆதரவின்றி நிற்கதியாய் நிற்கும் சோகம் ஏற்பட்டுள்ளது.

தாம்பரத்தில் பர்தா அணிந்து கைவரிசை: வடமாநிலத் திருட்டுக் கும்பல் 2 நாளில் சிறையில் அடைப்பு!

MUST READ