Homeசெய்திகள்தமிழ்நாடுவிநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை! இன்று முதல் 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் –...

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை! இன்று முதல் 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – பயணிகள் கவனத்திற்கு!

-

- Advertisement -

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்தும் 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

we-r-hiring

சுமூகமான பயணத்திற்காக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து இந்த சிறப்பு பேருந்துகள் திட்டமிடப்பட்டுள்ளன.

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் விவரங்கள்:

1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு:

  • இன்று: 585 பேருந்துகள்

  • நாளை: 1,255 பேருந்துகள்

  • நாளை மறுநாள்: 1,030 பேருந்துகள்

  • ஞாயிற்றுக்கிழமை: 650 பேருந்துகள்

2. கோயம்பேடு பேருந்து நிலையம்: கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு:

  • நாளை: 240 பேருந்துகள்

  • நாளை மறுநாள்: 240 பேருந்துகள்

  • ஞாயிற்றுக்கிழமை: 105 பேருந்துகள்

3. மாதவரம் பேருந்து நிலையம்: மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு:

  • நாளை முதல் ஞாயிறு வரை: தினமும் 110 சிறப்பு பேருந்துகள்

4. பிற நகரங்கள்:

  • பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மறுமார்க்கமாக சென்னை திரும்பும் வசதி:

விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, செப்டம்பர் 15-ஆம் தேதி பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 765 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்பதிவு நிலவரம்:

தற்போது வரை விடுமுறை நாட்களில் பயணம் செய்ய பெருமளவிலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்:

  • இன்று: 8,666 பயணிகள்

  • நாளை: 32,171 பயணிகள்

  • நாளை மறுநாள்: 18,772 பயணிகள்

  • ஞாயிற்றுக்கிழமை: 11,177 பயணிகள்

  • திங்கள்கிழமை: 23,740 பயணிகள்

கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன்னதாகவே தங்களது பயணங்களை திட்டமிட்டு முன்பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழக Smart City திட்டத்தில் ₹624 கோடி வீணா? CAG அறிக்கையில் அதிர்ச்சி தகவல் – பயன்படுத்தப்படாமல் கிடக்கும் ₹115 கோடி சொத்துகள்!

MUST READ