Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜய் வெளிநாட்டு பயணத்தில் முக்கிய நிகழ்வு! Silverstone-ல் அஜித் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்...

விஜய் வெளிநாட்டு பயணத்தில் முக்கிய நிகழ்வு! Silverstone-ல் அஜித் கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் முதல்வர்

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் விஜய்யின் முதல் வெளிநாட்டு பயணத்தில் முக்கிய நிகழ்வாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற Silverstone பந்தயத் தளத்தில் நடைபெறும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தை அவர் பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

we-r-hiring

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து சென்றுள்ளார். செப்டம்பர் 16ஆம் தேதி வரை அங்கு பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி Silverstone-ல் நடைபெறும் Michelin Le Mans Cup தொடரின் ஐந்தாவது சுற்றில் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். 44 கார்கள் பங்கேற்கும் இந்த பந்தயத்தை பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக போட்டி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஜித்தும் களத்தில்!

இந்த பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் Ajith RedAnt Racing அணியும் பங்கேற்கிறது. அஜித் LMP3 Pro/Am பிரிவில் பிரான்ஸ் வீரர் Romain Vozniak உடன் இணைந்து போட்டியிடுகிறார்.

மேலும், இந்தியாவின் முன்னாள் Formula 1 வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் Aditya Patel ஆகியோரும் Ajith RedAnt Racing அணிக்காக LMP3 பிரிவில் களமிறங்குகின்றனர்.

இதனால் ஒரே நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜய்யும், நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்தும் இடம்பெறுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது விஜய் கவனம்

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் உலகின் புகழ்பெற்ற Silverstone பந்தயத் தளத்தில் நடைபெறும் சர்வதேச கார் பந்தயத்தை நேரில் தொடங்கி வைப்பது, தமிழகத்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டங்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதால், இந்த நிகழ்வு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

தவெகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: ‘விசில்’ சின்னத்தையும் நிரந்தரமாக ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

MUST READ