
கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 14 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் கலப்பட சாராயம் குடித்தவர்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அது தொடர்பாக, விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா இ.கா.ப. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.பிரதீப் இ.கா.ப., இடமாற்றம் செய்யப்பட்டு, அவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக ஜியாவுல் ஹக் இ.கா.ப., நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மே 19- ஆம் தேதி 10, 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்” என அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பொறுப்பு கள்ளக்குறிச்சி மாவட்டக் கண்காணிப்பாளர் மோகனிடமும், செங்கல்பட்டு எஸ்.பி. பொறுப்பு காஞ்சிபுரம் மாவட்டக் கண்காணிப்பாளர் சுதாகரிடமும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பான வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.