Homeசெய்திகள்மாவட்டம்காரின் கூரை மேல் பாம்பு - அலறிய மக்கள், தப்பிய ஓட்டுநர்!

காரின் கூரை மேல் பாம்பு – அலறிய மக்கள், தப்பிய ஓட்டுநர்!

-

- Advertisement -

ராமநாதபுரத்தில் ஓடும் காரின் கூரை மீது பாம்பு ஒன்று ஒய்யாரமாகப் பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காரின் கூரை மேல் பாம்பு - அலறிய மக்கள், தப்பிய ஓட்டுநர்!

ராமநாதபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் கூரையின் மீது திடீரெனப் பெரிய பாம்பு ஒன்று ஏறி ஊர்ந்து சென்றுள்ளது.

we-r-hiring

காரை ஓட்டிச் சென்ற நபருக்கு இது தெரியாத நிலையில், சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளனர்.

மக்கள் அலறுவதைக் கேட்டுச் சந்தேகமடைந்த கார் ஓட்டுநர், உடனடியாகச் சாலையோரமாகக் காரை நிறுத்தினார்.

காரை நிறுத்தியதும் மேலேயிருந்த பாம்பைக் கண்டு திடுக்கிட்ட ஓட்டுநர், உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கிச் சமயோசிதமாக உயிர் தப்பினார்.

ஓடும் காரின் மேல் பாம்பு உலா வந்த இந்தக் காட்சி அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

MUST READ