Homeசெய்திகள்உலகம்“திருமணமும் வேண்டாம்... குழந்தையும் வேண்டாம்!”: அமெரிக்கப் பெண்களிடம் அதிகரிக்கும் புது ட்ரெண்ட் – மார்கன் ஸ்டான்லி...

“திருமணமும் வேண்டாம்… குழந்தையும் வேண்டாம்!”: அமெரிக்கப் பெண்களிடம் அதிகரிக்கும் புது ட்ரெண்ட் – மார்கன் ஸ்டான்லி ஆய்வில் பகீர்!

-

- Advertisement -

அமெரிக்காவில் இளம் பெண்களிடையே திருமணம் செய்து கொள்வது மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள ஆர்வம் வேகமாக உறைந்து வருவதாகவும், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தனித்து வாழும் நிலை உருவெடுக்கும் என்றும் ‘மார்கன் ஸ்டான்லி’ (Morgan Stanley) நிதி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“திருமணமும் வேண்டாம்... குழந்தையும் வேண்டாம்!”: அமெரிக்கப் பெண்களிடம் அதிகரிக்கும் புது ட்ரெண்ட் – மார்கன் ஸ்டான்லி ஆய்வில் பகீர்!

we-r-hiring

2030-க்குள் 50%-க்கும் அதிகமான பெண்கள் ‘சிங்கிள்’

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘மார்கன் ஸ்டான்லி’ அமைப்பு நடத்திய விரிவான ஆய்வின்படி, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவில் 25 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் (பாதிக்கும் மேலானோர்) திருமணம் செய்து கொள்ளாமலும், குழந்தைகள் பெறாமலும் வாழும் நிலையைத் தேர்ந்தெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கச் சமூகக் கட்டமைப்பில் இதுவரையில் இல்லாத அளவிற்கு, சுயமான வாழ்க்கை முறையை நோக்கி இளம் பெண்கள் நகர்ந்து வருவதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

சுய வருமானமும் சுயசார்புமே முக்கியக் காரணம்

பாரம்பரியக் குடும்ப அமைப்புகள் மற்றும் சமூக வழக்கங்களை விட, பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுயசார்பு அடைவதே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. பெண்கள் சுயமான வருமானம் ஈட்டுவதிலும், தங்களுக்குப் பிடித்தமான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சொந்தக் காலில் நிற்பதும், தொழில் வாழ்க்கையில் சாதனைகள் படைப்பதும் முதன்மை இலக்காக மாறியுள்ளதால், திருமண வாழ்க்கை மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற குடும்பப் பொறுப்புகளை அவர்கள் இரண்டாம் பட்சமாகவோ அல்லது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவோ கருதுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“திருமணமும் வேண்டாம்... குழந்தையும் வேண்டாம்!”: அமெரிக்கப் பெண்களிடம் அதிகரிக்கும் புது ட்ரெண்ட் – மார்கன் ஸ்டான்லி ஆய்வில் பகீர்!

பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் மாற்றங்கள்

இளம் பெண்களின் இந்த மனமாற்றம் அமெரிக்காவின் நுகர்வோர் சந்தை, வீட்டு வசதி மற்றும் தொழிலாளர் துறையில் பெரும் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது. சுயசார்புடன் வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, தனிநபர் நுகர்வை உயர்த்தினாலும், நீண்ட கால நோக்கில் நாட்டின் பிறப்பு விகிதம் குறைவதற்கும், சமூகக் கட்டமைப்பில் புதிய சவால்கள் உருவாகுவதற்கும் வழிவகுக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”: வீட்டில் திருடிய பேத்திக்கு பாடம் புகட்ட சிறைக்கு அனுப்பிய தாத்தா-பாட்டி!

MUST READ