அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் ‘போர்த் தொழில்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் செல்வன் தமிழின் வளர்ந்து வரும் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவர் சூது கவ்வும், பீட்சா 2, வில்லா, தெகிடி, வேழம், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் கூட்டணி முதன்முறையாக ஒரு திரில்லர் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். மலையாள நடிகை நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்கிறார். ஜாக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்திற்கு போர் தொழில் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான தெகிடி அவரின் சினிமா கேரியரில் முக்கியப் படமாக அமைந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.
E4 Experiments மற்றும் Eprius Studio உடன் இணைந்து Applause Entertainment நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் அசோக் செல்வன் போலீசாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.