spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் விஷ்ணு விஷாலின் புதிய படம்!?

நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் விஷ்ணு விஷாலின் புதிய படம்!?

-

- Advertisement -

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் ‘மோகன் தாஸ்‘ என்னும் படத்தைத் தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

we-r-hiring

ராட்சசன் மற்றும் கட்டா குஸ்தி படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படம் 3 வருடங்களாக ஒரு சில பிரச்சனைகளால் வெளியாகாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் படத்தை தியேட்டர்களில் அல்லாமல் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. மோகன்தாஸ் திரைப்படம் ஜியோ சினிமாவின் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் உருவாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் படடஹி ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகும் இத்திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக போவது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ