“விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம் என்று நடிகை சுகன்யா பேசியுள்ளார்.
நடிகை சுகன்யா தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்களில் சுகன்யாவும் ஒருவர். 1991 ஆம் ஆண்டு வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இந்தியன், கேப்டன், சின்ன மாப்ள, சின்ன கவுண்டர், மகாநதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு ஒரு சில கருத்து வேறுபாடுகளால் 2003 ஆம் ஆண்டில் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இது குறித்து சுகன்யாவிடம் கேட்ட போது “பெண்கள் பயந்து ஓட தேவை இல்லை. கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து செய்யலாம் அல்லது நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறலாம் .விவாகரத்து பெற தயக்கம் இருந்தால் கொடுமையான காலங்களை குடும்ப வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். பிடிக்காத திருமணத்தில் இருந்து வெளியேற விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம். அதெல்லாம் கடந்து தான் பெண்கள் வரவேண்டும்” என்று பேசியுள்ளார்.