Homeசெய்திகள்மாவட்டம்அரூரில் மழை வேண்டி நூதன வழிபாடு: சாமிக்கு ராகி களி, கருவாட்டுக் குழம்பு பிரசாதம்! கடுமையான...

அரூரில் மழை வேண்டி நூதன வழிபாடு: சாமிக்கு ராகி களி, கருவாட்டுக் குழம்பு பிரசாதம்! கடுமையான வெயில் தாக்கம் மற்றும் குடிநீர் பஞ்சத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள் சிறப்புப் பிரார்த்தனை.

-

- Advertisement -

ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்களில் சீர்வரிசையுடன் பால் குடம் எடுத்து ஊர்வலம். பாரம்பரிய முறைப்படி சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு.அரூரில் மழை வேண்டி நூதன வழிபாடு: சாமிக்கு ராகி களி, கருவாட்டுக் குழம்பு பிரசாதம்! கடுமையான வெயில் தாக்கம் மற்றும் குடிநீர் பஞ்சத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள் சிறப்புப் பிரார்த்தனை.

தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடுமையான வெயில் தாக்கம், குடிநீர் பஞ்சம் மற்றும் விவசாயப் பாதிப்புகளைப் போக்கக் கோரி, பொதுமக்கள் நூதன முறையில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

we-r-hiring

அரூர் மேல் பாட்ஷாபேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து நடத்திய இச்சடங்கு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

சீர்வரிசையுடன் பால் குடம் ஊர்வலம்
கடந்த சில மாதங்களாகக் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளும், பொதுமக்களும் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்; மேலும் குழந்தைகளுக்கு உடல் உபாதைகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மழை பெய்து இப்பகுதி செழிக்க வேண்டிய வேண்டி, மேல் பாட்ஷாபேட்டை அருள்மிகு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசையுடன் பால் குடங்களை ஏந்திப் புறப்பட்டனர்.

இந்த ஊர்வலம் ராம் தியேட்டர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக நான்கு வழிச்சாலையை அடைந்து, அங்கிருந்து மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலைச் சென்றடைந்தது. தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகர், மேட்டுப்பட்டி மாரியம்மன், அங்காளம்மன் வேடியப்பன், காட்டு மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கோட்டை காளியம்மன் உள்ளிட்ட உள்ளூர் கோயில்களில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சீர்வரிசைகளுடன் பாலாபிஷேகம் செய்யப்பட்டு, அம்மனைக் குளிரச் செய்து மழை வேண்டி தீவிர பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

ராகி களி மற்றும் கருவாட்டுக் குழம்பு பிரசாதம்
சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, சாமிக்கு பாரம்பரிய முறையில் ராகி களி மற்றும் கருவாட்டுக் குழம்பு படையலிடப்பட்டு பிரசாதமாகத் தயாரிக்கப்பட்டது. பின்னர், அங்கு திரண்டிருந்த அனைத்து பொதுமக்களுக்கும் இந்தக் களி மற்றும் கருவாட்டுக் குழம்பு பிரசாதமாக வழங்கப்பட்டு, அனைவரும் அதனை உட்கொண்டு வழிபட்டனர்.

முன்னோர்களின் வழியில் வழிபாடு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “அடர்ந்த காலங்களில் மழை பெய்யாமல் வறட்சி ஏற்படும்போது, சாமிகளுக்குச் சீர்வரிசை எடுத்து பாலபிஷேகம் செய்து, களி – கருவாட்டுக் குழம்பு படையலிட்டு வழிபாடுகள் நடத்தினால் மழை பெய்யும் என்பது எங்கள் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது. காலப்போக்கில் இந்த முறைகள் மறைந்துவிட்டாலும், தற்போது கடுமையான வெயில் தாக்கத்தால் மக்கள் படும் அவதியைப் போக்க மீண்டும் எங்கள் முன்னோர்கள் காட்டிய பாரம்பரிய வழியிலேயே இந்த வழிபாட்டைச் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே மாகாண்யத்தில் அனுமதியின்றி இயங்கும் கல் குவாரியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

MUST READ