Homeசெய்திகள்இந்தியாதேசிய தேர்வுகள் முகமையின் அலுவலகத்தில் நேரில் ஆய்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை!

தேசிய தேர்வுகள் முகமையின் அலுவலகத்தில் நேரில் ஆய்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை!

-

- Advertisement -

தேர்வுகளை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்வுகள் முகமை (NTA) உண்மையில் செயல்படுகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் நடைபெறும் தொடர் மோசடிகளுக்கு எதிராகவும், தேர்வு நடைமுறையை மேம்படுத்தக் கோரியும் அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தேசிய தேர்வுகள் முகமையின் அலுவலகத்தில் நேரில் ஆய்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை!

நீதிமன்றத்தின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்
வழகின் விசாரணையின் போது, தேர்வு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேசிய தேர்வுகள் முகமைக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டுவிட்டதாகவும், இன்போசிஸ் நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இக்குழு செப்டம்பர் மாத இறுதிக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

we-r-hiring

உச்சநீதிமன்றத்தின் நேரடி ஆய்வு எச்சரிக்கை
இதனைக் கேட்ட நீதிபதிகள், “தேசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்புக்கு தனி அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பு உண்மையில் உள்ளதா? அது செயல்படுகிறதா இல்லையா? மற்றும் ஊழியர்கள் விவகாரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நாங்கள் நேரில் வந்து பார்வையிடுவோம்” என எச்சரித்தனர். மேலும், என்டிஏ-விற்கு நிரந்தர ஊழியர்கள், சிறப்புத் திறன் கொண்ட பணியாளர்கள், உரிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தேசிய தேர்வுகள் முகமையின் அலுவலகத்தில் நேரில் ஆய்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை!

உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்

  • நந்தன் நிலேகனி தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் வெறும் காகித அளவில் நின்றுவிடாமல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

  • சீர்திருத்தப் பணிகள் குறித்து மத்திய அரசின் இணைச் செயலாளர் இரண்டு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

  • தேர்வுச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த விவரங்களை NTA தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

  • எழுத்துப்பூர்வத் தேர்வுகளிலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாறுவது என்பது படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாகக் கூறி நீதிபதிகள் விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

பிறப்பு, இறப்பு பதிவு விதிகளில் அதிரடி மாற்றம்! அக்டோபர் 1 முதல் புதிய சட்டம்

MUST READ