Homeசெய்திகள்தமிழ்நாடு"ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதன், திராவிட இயக்கம் எஃகு கோட்டை!" - பெரியார் திடலில் கி.வீரமணி...

“ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதன், திராவிட இயக்கம் எஃகு கோட்டை!” – பெரியார் திடலில் கி.வீரமணி மற்றும் தலைவர்கள் அதிரடிப் பேச்சு!

-

- Advertisement -

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் “நெருப்பாற்றில் நீந்திய காலம்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, திருச்சி சிவா எம்.பி, தமிழ்தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தியாகு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மிசா காலத்துத் துயரங்களையும், தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் அவர்கள் இந்நிகழ்ச்சியில் விரிவாகப் பகிர்ந்து கொண்டனர்."ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதன், திராவிட இயக்கம் எஃகு கோட்டை!" - பெரியார் திடலில் கி.வீரமணி மற்றும் தலைவர்கள் அதிரடிப் பேச்சு!

“வரலாற்றைத் திரிப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” – தலைவர்கள் கண்டனம்

we-r-hiring

நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, வரலாறு என்றால் என்னவென்று தெரியாதவர்கள் தற்போது ஆட்சியமைத்துள்ளதாகக் விமர்சித்தார். “கலைஞர் சிறையில் இருந்தபோது நம் தலைவர் (மு.க.ஸ்டாலின்) கைக்குழந்தையாகச் சென்று சந்தித்த வரலாறு உண்டு. உழைப்புக்கு மறுபெயர் ஸ்டாலின்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய திருச்சி சிவா எம்.பி, மிசா காலத்தில் திமுக தலைவர்கள் பட்ட துயரங்களை நினைவு கூர்ந்தார். “மிசாவில் திமுக தலைவர் சிறை செல்லவில்லை என்கிறார்கள். 50 ஆண்டுகள் கழித்து இன்று சான்று கேட்கிறார்கள். திருச்சியில் பெரியார் கொடுத்த கல்லூரியில் மிசா காலத்தில் தேர்வு எழுதியவன் நான். நெருப்பாற்றில் நீந்திய காலம் அது. திமுகவினரை எல்லை கடந்து பேசுகிறார்கள். ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதன், திராவிட இயக்கம் எஃகு கோட்டை” என ஆவேசமாகத் தெரிவித்தார்."ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதன், திராவிட இயக்கம் எஃகு கோட்டை!" - பெரியார் திடலில் கி.வீரமணி மற்றும் தலைவர்கள் அதிரடிப் பேச்சு!

“சினிமாவில் தான் டூப் உண்டு, சிறையில் டூப் இல்லை!” – கி.வீரமணி முழக்கம்
நிகழ்ச்சியின் நிறைவாக உரையாற்றிய கி.வீரமணி, மிசா காலத்தில் சென்னை சிறைச்சாலையில் நடந்த வன்கொடுமைகளை விவரித்தார். அப்போது அவர் பேசியதாவது, “அவசரக் காலத்தில் சென்னை சிறைச்சாலையில் என்னுயிர் காத்தவர் திமுக தலைவர். மிசாவில் அவர் சிறை செல்லவில்லை என்கிறார்கள்; சினிமாவில் வேண்டுமானால் டூப் உண்டு, சிறையில் டூப் இல்லை! அடிவாங்கிய களைப்பில் நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, இரத்த வெள்ளத்தில் என் மீது விழுந்தவர் 22 வயது இளைஞரான ஸ்டாலின். அவரிடம் ‘தைரியமாக இருங்கள் தம்பி’ என்றேன்.

ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதன் என்று பெயர்; இந்தத் திராவிட இயக்கம் ஒரு எஃகு கோட்டை, அதனை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது. வரலாற்றைத் திரித்துப்பேசுபவர்கள் விரைவில் அதில் சிக்கிக்கொள்வார்கள், உங்களைக் காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள்” எனத் தன் உரையில் கடுமையாக எச்சரித்தார்."ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதன், திராவிட இயக்கம் எஃகு கோட்டை!" - பெரியார் திடலில் கி.வீரமணி மற்றும் தலைவர்கள் அதிரடிப் பேச்சு!

நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள்
இந்தக் கருத்தரங்கில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள், கழகப் போராளிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மிசா காலத்துத் தியாகங்களை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவசர நிலை காலத்தில் அரசியல் கைதிகள் பட்ட இன்னல்களையும், திராவிட இயக்கத் தலைவர்களின் தியாகத்தையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தற்போதைய அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

“தவெக ஆட்சி 2027 வரை கூட இருக்காது… சில மாதங்களில் நம்பிக்கையில்லா தீர்மானம்!” – ஏ.கே. செல்வராஜ் ஆவேசப் பேச்சு!

MUST READ