Homeசெய்திகள்சினிமாஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு தபால் தலை வெளியீடு

ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு தபால் தலை வெளியீடு

-

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தைப் பாராட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண அரசு சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

we-r-hiring

இளையராஜா தற்போது ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்த சூழலில், விக்டோரியா மாகாண அரசு சார்பில் மெல்போர்ன் நகரில் உள்ள “பார்லிமென்ட் ஆப் விக்டோரியா” சட்டப்பேரவை அவையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தைப் பாராட்டி விக்டோரியா மாகாண அரசு சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.

மாகாண நிதித் துறை அமைச்சர் என்வர் எர்டோகன் சிறப்பு தபால் தலையை வெளியிட, அதனை இசைஞானி இளையராஜா பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தகசபை (விக்டோரியன் சாப்டர்) பொதுச்செயலாளர் மிதுன் ராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதையடுத்து பேசிய இளையராஜா, தனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுரவித்து சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்ட விக்டோரியா மாகாண அரசின் நிதியமைச்சர் என்வர் எர்டோகன் மற்றும் விக்டோரியா அவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், தனது இசைக்கு உயிர் கொடுத்த மக்கள், தன்னுடன் இணைந்து பயணித்த கலைஞர்கள் மற்றும் தனது பாடல்களை ரசித்து வரும் அனைத்து தலைமுறையினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

MUST READ