தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தை காண்பதற்காக அக்கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர்.
விஜய்யின் வருகையை முன்னிட்டு பிரச்சாரத் திடல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சியினர் வந்து காத்திருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.

தமிழ்நாடே தளபதியின் கோட்டை
இந்நிலையில், விஜய்யின் ஆதரவாளர் ஒருவர் உற்சாகமாக பேசிய காட்சிகள் கவனம் பெற்றுள்ளன. தாராபுரம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் விஜய்க்கு ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடே தளபதியின் கோட்டை தான். இந்த பிராண்டை யாராலும் அழிக்க முடியாது. ஒரு விரல் புரட்சியை எந்த கட்சியாலும் மாற்ற முடியாது என அவர் உற்சாகமாக கூறினார்.
நாங்க பண்ணப்போற சம்பவம் வேற லெவலில் இருக்கும்
தொடர்ந்து பேசிய அந்த தொண்டர், தங்களது தரப்பில் நடைபெற உள்ள அரசியல் நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் இருக்கும் எனக் கூறி, விஜய் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற வகையில் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது விஜய் பொதுக்கூட்டங்களில் பேசும்போது மேற்கொள்ளும் சில செய்கைகளைப் போலவே கைகளால் சைகை செய்த அவர், தனது ஆதரவை வெளிப்படுத்தி சபதம் எடுத்தார்.
விஜய்யை போலவே செய்கை செய்த தொண்டர்
விஜய்யின் வருகைக்காக காத்திருந்த அந்த தொண்டர், அவரது பேச்சு மற்றும் செய்கைகளை பின்பற்றி உற்சாகமாக சபதம் எடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
விஜய்யை நேரில் காணவும், அவரது பிரச்சாரத்தை கேட்கவும் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ள நிலையில், கட்சியினர் மத்தியில் காணப்படும் உற்சாகத்தை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
தேர்தல் களத்தில் அதிகரிக்கும் பரபரப்பு
தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே விஜய்யின் பிரச்சாரத்தை காண திரண்டுள்ள தவெக தொண்டர்களின் உற்சாகம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
