spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"கழுவேத்தி மூர்க்கன் ட்ரெய்லர் வெளியானது - லேட்டஸ்ட் அப்டேட்"

“கழுவேத்தி மூர்க்கன் ட்ரெய்லர் வெளியானது – லேட்டஸ்ட் அப்டேட்”

-

- Advertisement -

கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ராட்சஷி படத்தை இயக்கிய கௌதம ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கிறது மற்றும் டி இமான் இசையமைத்திருக்கிறார்.

அருள்நிதி ‘திருவின் குரல்’ படத்தை தொடர்ந்துசமீபத்தில் கரு பழனியப்பன் இயக்கத்தில் அரசியல் சார்ந்த படமான ‘புகழேந்தி எனும் நான்’ என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கும் டி இமான் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் துசாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படம் வருகின்றமே 26 ஆம் தேதி திரைக்கு வரும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ட்ரெய்லரின் மூலம் இப்படம் கிராமத்தில் உள்ள சாதிகள் குறித்தும் சாதி அரசியல் குறித்தும் பேசக்கூடிய படம் என்று தெரியவந்துள்ளது.

MUST READ