விஜய் உடன் நடித்த அனுபவத்தை பிரதீப் முத்து பகிர்ந்துள்ளார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒரு மாஸ் கேங்ஸ்டர் படமான படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரே தனது ட்விட்டர் பயோவில் மீசைய முறுக்கு, வீட்ல விசேஷம் ஆகிய படங்களை அடுத்து லியோ படத்தையும் இணைத்திருந்தார். Why blood same blood யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நகைச்சுவையான கமெண்ட்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் லியோ படத்தில் விஜய் உடன் நடித்த அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
“லியோ படத்தில் 10 வினாடிகள் நான் இருப்பேன். லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. தளபதி விஜயை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. லியோ படக்குழு முழுவதும் அற்புதமானது” என்று தெரிவித்துள்ளார்.