Homeசெய்திகள்இந்தியா2023 தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு...

2023 தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

-

- Advertisement -

2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம் திருத்தப்பட்டது. தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்கட்சி தலைவர் இவர்களோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்காமல் தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரை குழுவில் சேர்த்து அரசு சட்டம் இயற்றியது.

we-r-hiring

அதன் பின்னர் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

2023 சட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற நியமனங்களையும் எதிர்த்து வழக்க தொடரப்பட்டது.

வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு வாதிட்டது.

இந்த மனு மீது கடந்த மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி திபாங்கர் தத்தா வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்று தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், இரண்டாவது நீதிபதி சதீஷ் சந்திர மிஸ்ரா அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கினார்.

தற்போது வழக்கு தலைமை நீதிபதி முடிவுக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மகன் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞராக உள்ளதால் இந்த தீர்ப்பில் ஒரு சார்பு நிலை இருக்கலாம், எனவே அந்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை, அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றுக்கோரி தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் முறையீடு செய்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, அந்த மனுவை ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல், பிரியங்கா மீது வழக்கு! – டெல்லி போலீஸ் நடவடிக்கை

MUST READ