மலேசியாவில் நடைபெற்ற 9வது உலக சிலம்பப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த சிலம்ப வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 62 பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உலக சிலம்பப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியின் முடிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 22 தங்கப் பதக்கங்கள், 15 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 25 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 62 பதக்கங்களை கைப்பற்றினர்.

குறிப்பாக, 22 தங்கப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றிருப்பது போட்டியில் அவர்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. சிலம்பக் கலையில் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும் சர்வதேச அளவில் பெருமை சேர்க்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.
மலேசியாவில் இருந்து போட்டிகளை நிறைவு செய்த வீரர், வீராங்கனைகள் தாயகம் திரும்பிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்களுடன் விமான நிலையத்திற்கு வந்த வீரர்களை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சிலம்ப ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
வீரர்களின் வெற்றியை பாராட்டி பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தங்களது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட வீரர்கள், “மலேசியா மண்ணில் 22 கோல்டு மெடல் அடித்திருக்கோம்” என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் உலக அளவில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், சர்வதேச போட்டியில் இந்திய வீரர்கள் 62 பதக்கங்களை குவித்திருப்பது சிலம்பப் பயிற்சி பெறும் இளம் தலைமுறையினருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த சிலம்ப வீரர், வீராங்கனைகள் சர்வதேச அரங்கில் தங்களது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். தாயகம் திரும்பிய வீரர்களுக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு, அவர்களின் வெற்றிக்கு கிடைத்த மக்களின் பாராட்டாக அமைந்தது.
நெடுஞ்சாலை முதல் மருத்துவமனை வரை இந்தி ஆதிக்கமா? – வேல்முருகன் கேள்வி
