Homeசெய்திகள்இந்தியாஇந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி போராட்டம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி போராட்டம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

-

- Advertisement -

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இந்திய இளைஞர் காங்கிரஸ் அனுமதி கோரியிருந்தது.

we-r-hiring

செப்டம்பர் 25ம் தேதி 100 முதல் 150 பேர் பங்கேற்கும் அமைதியான போராட்டத்திற்கு அனுமதி கோரிய நிலையில், டெல்லி காவல்துறை அக்டோபர் 1ம் தேதி அனுமதி மறுத்தது.

இதை எதிர்த்து இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமைதியான போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை, போராட்டத்தையே தடை செய்யும் அதிகாரமாக காவல்துறை பயன்படுத்த முடியாது என்றும், கட்டுப்பாடுகள் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலும் இருக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை நாளை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

“நாடே மோடியுடன் முரண்படுகிறது”: பெங்களூரில் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையைக் கண்டித்து துருவ் ரதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பெருந்திரள் போராட்டம்!

MUST READ